இடியாப்ப சிக்கல்.. சொந்த கட்சியினருக்கே மிரட்டல்.. ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரினார் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கிய வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறையீடு செய்துள்ளார். மேலும் தன்னுடைய முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு கடந்த மாதம் 24-ம்தேதி வந்திருந்தார்..
அப்போது அவருக்கு வரவேற்பு அளிக்கும்போது அதிமுகவினர் மோதிக்கொண்டனர்... குறிப்பாக சாத்தூர் மாஜி எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கு பதிவு
இந்த மோதலில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் வீராவேரெட்டி புகார் தந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஆள்கடத்தல்
இதுதொடர்பான வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்பதற்காக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்... இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, கொலைமிரட்டல் மட்டுமில்லாமல், ஆள்கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகள் எப்ஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால், ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முறையீடு
இதையடுத்து மாஜி அமைச்சர் தரப்பானது, முன்ஜாமீன் மனுவை வலியுறுத்துவதில்லை என்று தெரிவித்து அதனை வாபஸ் பெற்றது.. இறுதியில், வழக்கை விசாரித்த கோர்ட், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது... இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி உள்ளார் ராஜேந்திர பாலாஜி. இதே வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்துள்ளார்... மேலும், தன்னுடைய முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

கோரிக்கை
ஆனால் மனுவை ஏற்பதா? இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில், ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூற, அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த வழக்கின் போக்கு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இன்னொரு வழக்கிலும் இவரது பெயர் அடிபட்டு வருவது, அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications