கருணாநிதியால்தான் எம்ஜிஆர் உயர்ந்தாரா? நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிராக திரண்ட அதிமுக 'தலை'கள்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உயர்வு பெற்றார் என நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சரமாரியாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், கருணாநிதியால்தான் எம்ஜிஆர் உயர்வு பெற்றார் என கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் கூறியதாவது: அண்ணா மறைந்த போது திமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சனை வந்தது. அப்போது நெடுஞ்செழியனையே முதல்வராக்க வேண்டும் என பலரும் கருத்து முன்வைத்தனர். ஆனால் எம்ஜிஆர்தான், முரசொலி மாறன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து கருணாநிதியை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வராக்கினார். எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே கருணாநிதி இதை வெளிப்படையாகவே பேசினார். இந்த வரலாற்றை மறைத்துவிட்டு பேசக் கூடாது. கருணாநிதி முதல்வர் பதவியில் அமர காரணமே எம்ஜிஆர் மட்டுமே முழுமையான காரணம். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.
கருணாநிதியால்தான் எம்ஜிஆர் உயர்ந்தார் என ரஜினிகாந்த் பேசியிருப்பதை தமிழ்நாடு ஏற்குமா ? எம்ஜிஆர் ரசிகர்கள்தான் ஏற்பார்களா? திமுகவில் எம்ஜிஆர் இருந்தவரைதான் கருணாநிதி பதவியில் இருந்தார். எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியேறியதால் கருணாநிதி அமைச்சராகவும் முடியவில்லை. முதல்வராகவும் முடியவில்லை. கருணாநிதியை 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு. கருணாநிதியை புகழ்வதற்காக வரலாற்றை தவறாக மறைத்து ரஜினிகாந்த் பேசியது வருத்தம் தருகிறது. ரஜினிகாந்த் இப்படி பேசியிருக்கக் கூடாது. இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் தெரிவித்தனர்.
மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு 50,000 இருக்கைகள் போட்டிருந்தனர். ஆனால் வெறும் 899 பேர்தான் விழாவுக்கே வந்திருந்தனர். இதனைவிட கருணாநிதியை வேறுவகையில் அவமதிக்க முடியுமா? ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எழுதிக் கொடுத்த உரையை வாசித்துவிட்டு வந்துவிட்டனர் என குறிப்பிட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications