முனுசாமி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. 2 நாளில் 2 இடத்திலும் ஷாக் தந்து.. ஊரெல்லாம் இதான் பேச்சு
2 நாளில் 2 கட்சிக்கு தாவி உள்ளார் முன்னாள் அமமுக பிரமுகர் முனுசாமி
சென்னை: அதிமுக மற்றும் பாஜக என 2 கட்சிகளையும் ஒரே நேரத்தில் அசரடித்து விட்டார் நீலாங்கரை முனுசாமி.. இந்த 2 நாட்களாகவே முனுசாமி பற்றிய பேச்சுதான் பரபரப்பை கூட்டி வருகிறது.. என்ன காரணமாக இருக்கும்?!
கட்சி தாவல் என்பது அரசியலில் இயல்பான நிகழ்வு.. அதிலும் தேர்தல் காலங்களில் கட்சி தாவல்கள் நடப்பது வழக்கமான ஒன்றுதான்.
சீட் கிடைக்காமல் போனவர்கள் கோபத்தில் வேறு கட்சிக்கு தாவுவார்கள்.. முக்கிய பதவி, பொறுப்பு கிடைக்காதவர்கள் வேறு கட்சிக்கு தாவுவார்கள்.. பதவி ஆசை, சீட் ஆசை காட்டி, பணத்தாசை காட்டி, எதிர்க்கட்சியினர் முக்கிய புள்ளிகளை விலைக்கு வாங்கி கொள்வார்கள்..

பிரச்சனைகள்
பொதுநல எண்ணத்துடன், மக்களின் அடித்தட்டு பிரச்சனைகளை கையில் எடுத்து, அதற்காக அவர்களுடன் களத்தில் நின்று போராடி, அரசுடன் மல்லுக்கட்டி, மக்களின் நலனுக்கான விஷயங்களை பெற்றுத்தருவோர் குறைந்துவிட்டனர்.. களத்தில் இறங்கி உழைக்கிறார்களோ இல்லையோ, தங்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் கிடைக்காதா என்ற மனப்பான்மையிலேயே அரசியலுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டிருக்கிறது..

உறுதிப்பிடிப்பு
அந்த வகையில், கொள்கை பிடிப்பும், உறுதிப்பிடிப்பும் இல்லாதோர், கட்சி தாவல்களில் ஈடுபடுவது சர்வசாதாரணமாகி கொண்டிருக்கிறது.. இதற்கான உறுத்தல் அவர்களிடம் கொஞ்சமும் காணப்படுவதில்லை.. நம்மை பற்றி தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையும் இருப்பதில்லை.. பகிரங்கமாகவே, வெளிப்படையாகவே கட்சிகளில் தாவுவதை பிரகனடப்படுத்தி கொள்வது இயல்பாகி விட்டது.

முனுசாமி
விளையாட்டில் சாதனை, மருத்துவத்தில் சாதனை, விண்வெளி ஆய்வில் சாதனை என்று சாதனையில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறது இந்த கட்சி தாவல் சாதனைகள்.. அந்த வகையில் முனுசாமி ஒரு ஷாக் தந்துள்ளார்.. அமமுக தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர்தான் நீலாங்கரை M.C. முனுசாமி.

பாஜக
கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிமுகவில் இவர் இணைந்தார்.. அதுவும், முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்... அதற்கு பிறகு, ரெண்டே நாள்தான்.. நேற்று அதாவது 31-ம்தேதி பாஜகவிற்கு தாவிவிட்டார்.. அதுவும், பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கே முனுசாமி நேரில் சென்றுவிட்டார்.

அதிர்ச்சி
கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீலாங்கரை M.C. முனுசாமி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.. 2 நாளில் நீலாங்கரை M.C. முனுசாமி 2 கட்சிக்கு தாவியுள்ளார்.. ஒரே நாளில் இவரது திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. இவருடைய அரசியல் கொள்கையும் என்னவென்று தெரியவில்லை.. இதை அவரது ஆதரவாளர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ அதுவும் தெரியவில்லை.. ஆக மொத்தம் அமமுக, அதிமுக, பாஜக என ஒரு ரவுண்டு அடித்துவிட்டார் முனுசாமி..!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications