போடு..எதிர்பாராத ட்விஸ்ட்! மீண்டும் லைம் லைட்டுக்கு வரும் ‘முறுக்கு மீசை’ ஐபிஎஸ்! அந்த கட்சி தலைவரா?
சென்னை: பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து தமிழகத்தில் மிகப் பிரபலமான காவல்துறை அதிகாரியாக வலம் வந்த ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். பிரபல தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் உலாவுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை..
தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக திமுக கூட்டணி தமிழக எதிர்க் கட்சிகளை ஸ்வீப் செய்திருக்கும் நிலையில் தாங்கள் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறும் என அண்ணாமலை கூறியுள்ளார். தற்போதுள்ள 11 சதவீத வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும் என கூறி வருகிறார்.
ஆனால் அண்ணாமலை பொய்யான கருத்துக்களை கூறுவதாக தமிழக பாஜகவிலுள்ள மற்ற தலைவர்கள் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் கூறி வருவதை பார்க்க முடிகிறது.
தெலுங்கானா ஆளுநர் பதவியை விட்டுவிட்டு கட்சிக்காக தேர்தலை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரங்கள் ஒரு புறம் இருக்க தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் இடையே ஒரு புதிய தகவல் உலாவுகிறது. தேர்தல் தோல்வி காரணமாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தலைமையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு கட்சி தலைமை மாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படி மாற்றம் நிகழும் போது, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தான் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல சம்பவங்களை செய்திருக்கும் அவர், தனது கடைசி கால பணி அனுபவத்தில் தமிழகம் முழுவதும் மிகப் பிரபலமாக இருந்தார்.
அவர் செய்திகளில் அடிபடாத நாளே கிடையாது. சூப்பர், அதிரடி, மாஸ் என அவரை தொலைக்காட்சிகளும், சமூக வலைதளங்களில் பலரும் புகழ்ந்தனர். அதன் பிறகு நீதிமன்றம் சென்ற அவர், சர்ச்சைகளோடு ஓய்வு பெற வேண்டியதானது. இந்நிலையில் தற்போது அவரது பெயர் திடீரென அரசியலில் அடிபடுகிறது.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications