தியாகத்தலைவியா..? சசிகலா அப்படி என்ன தியாகம் செய்தார்..? சொல்லுங்க... ஜெயக்குமார் ஆவேசம்..!
சென்னை: தியாகத்தலைவி எனக் கூறிக்கொள்ளும் சசிகலா அப்படி என்ன தியாகம் செய்திருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வினவியுள்ளார்.
Recommended Video
கல்வெட்டில் பொதுச்செயலாளர் என சசிகலா பெயர் பொறிக்கப்பட்டிருப்பது சட்டப்படி தவறான செயல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி 8 மாதங்கள் ஆகிறதே ஏன் இதுவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருவதை அவர் தவிர்த்து வந்தார் எனக் கேட்டுள்ளார்.

அதிமுக பொன்விழா
அதிமுக பொன்விழா கொண்டாட்டம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு பக்கம் அதிமுக தலைமைக்கழகத்தில் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், கொண்டாட மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் சசிகலா கொண்டாடினார். இதனிடையே எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.

ஜெயக்குமார்
சென்னை மெரினாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும், அரசியலமைப்பு சட்டத்தையும் மீறி சசிகலா செயல்பட்டு வருவதாகவும் அவரால் தான் 1996-ம் ஆண்டு அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேரிட்டதாகவும் சாடினார். மீசை வைத்துக்கொண்டவர்கள் எல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிவிட முடியாது என்றும் அதேபோல் எல்லோரும் ஜெயலலிதாவாகிட முடியாது எனவும் கூறினார்.

என்ன தியாகம்?
தியாகத்தலைவி என தன்னைக் கூறிக்கொள்ளும் சசிகலா, அப்படி என்ன தியாகம் செய்திருக்கிறார் என வினவிய ஜெயக்குமார், ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்டுக்கோப்பாக நல்ல முறையில் இயங்கி வருவதாக தெரிவித்தார். இதனால் அதிமுகவை யாராலும் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார்.

ஏன் செல்லவில்லை?
பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி 8 மாதங்கள் ஆகிறதே, ஏன் இதுவரை ஜெயலலிதா நினைவிடத்துக்கோ அல்லது எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கோ அவர் செல்லவில்லை என வினவிய அவர், அதிமுக பொன்விழாவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேற்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வந்து சென்றுள்ளதாக விமர்சித்தார். இதனிடையே ஜெயக்குமார் ஒரு பக்கம் இப்படி பேட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், யார் மனதும் புண்படும்படி தரக்குறைவாக பேச வேண்டாம் என சசிகலா தனது ஆதரவாளர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications