கசாப்புக்கடை ஆடு..மீசையில் மண் ஒட்டாத ஓபிஎஸ்..ஏற்றுக்கொள்ள மாட்டோம்..ஜெயக்குமார் உறுதி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக அத்துமீறல்களை எல்லாம் மீறி நாங்கள் வெற்றிப் பெறுவோம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் நினைத்தார் அது நடக்கவில்லை என்றதும் இரட்டை இலைக்கு ஆதரவு என நாடகம் ஆடுகிறார் என ஓபிஎஸ்ஸை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கசாப்புக்கடைக்காரரை நம்பி போன ஆட்டுக்கு என்ன நடக்குமோ அது தான் ஓபிஎஸ்ஸை நம்பிப் போனவர்களுக்கு நடந்துள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுபடுவதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை இன்று சந்தித்து புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திமுக பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றன. அதனை ஆதாரத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.
ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப பெற்றது என்பது கசாப்பு கடைக்காரரை நம்பி ஆடுகள் சென்றால் என்னவாகும் அதுதான் தற்போது நடந்துள்ளது. இரட்டை இலைக்காக வாபஸ் எனக் கூறுவது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல உள்ளது. ஈபிஎஸ் - ஓபிஎஸ் எப்படி சந்திப்பு நடைபெறும் அதற்கான வாய்ப்பே இல்லை.
இரட்டை இலையை முடக்க முடியவில்லை என்பதால் இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். திமுகவின் பி டீம்மாக ஓபிஎஸ் செயல்பட்டு இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை. எங்கள் தரப்பிற்கு இரட்டை இலைக் கிடைத்தது ஒன்றரைக்கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதனால் நாங்கள் நிச்சயமாக வெற்றிப் பெறுவோம்.
ஜனநாயக அத்துமீறல்களை எல்லாம் மீறி நாங்கள் வெற்றிப் பெறுவோம்.
ஓபிஎஸ் முரண்பாட்டுடன் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். செங்கோட்டையன் ஓபிஎஸ்ஸுக்கு நன்றி தெரிவித்தது அவரது தனிப்பட்டக் கருத்து. நான் கூறுவது கட்சியின் கருத்து. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த இடைத்தேர்தலுக்காக மட்டுமே. திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் ஓபிஎஸ்ஸை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளார் ஜெயக்குமார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications