அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறாரா டிடிவியின் ரைட் ஹேண்ட் பழனியப்பன்?
சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு விசுவாசியாக உள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். அது போல் இன்று ஒரு கட்சியில் இருப்பவர்கள் நாளை வேறு கட்சியில் இருப்பார்கள்.
அந்த வகையில் அதிமுகவில் ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். இவர் ஜெ. மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் அணியுடன் செயல்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அமமுக
இதையடுத்து அவர் தினகரனின் அமமுகவில் தொடர்ந்து வருகிறார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வனை போல் பழனியப்பனும் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே மானாமதுரை மாரியப்பன் கென்னடி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர்.

திமுக
அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு ஸ்டாலின் பல நல்ல பதவிகளை வழங்கி அவர்களை கவுரவித்து வருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி உள்ளிடோரை சொல்லலாம். அது போல் தங்கதமிழ்ச் செல்வனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என தெரிகிறது.

பழனியப்பன்
தங்க தமிழ்ச் செல்வனை எப்படி செந்தில் பாலாஜி திமுகவுக்கு அழைத்து வந்தாரோ அது போல் பழனியப்பனையும் திமுகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகின்றன. ஆனால் இதை பழனியப்பனின் ஆதரவாளர்கள் மறுக்கிறார்கள்.

அதிமுக மாஜிக்கள்
ஒரு பக்கம் திமுகவில் ஐக்கியமான அதிமுக மாஜிக்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க அதிமுக, அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு குறி வைக்கிறார்கள். அது போல் மறுபுறம், சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதை தடுக்க அவரது ஆதரவாளர்களை முன்னாள் முதல்வர் தட்டி தூக்கி அதிமுகவில் இணைய வைக்கும் காட்சிகளும் நடக்கின்றன.

தென் மண்டல நிர்வாகிகள்
அதிலும் குறிப்பாக அதிமுகவில் உள்ள தென் மண்டல நிர்வாகிகளை திமுக குறிவைப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது போல் அமமுகவில் டம்மியாக இருப்போரை அழைத்து பேசி அவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுப்பதாக அதிமுக பேசி வருகிறது. யார் யார் எந்த பக்கம் தாவுவார்கள் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications