யாருங்க சொன்னது.. தலைமறைவாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி வந்து சொன்னாரா.. ஜெயக்குமாருக்கு வந்த ஆவேசம்
ராஜேந்திர பாலாஜி குறித்து ஜெயக்குமார் பேட்டி தந்துள்ளார்
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பதாக யார்கிட்ட சொன்னார்? அவர் ஒன்றும் தலைமறைவாக இல்லை... உரிய சட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தந்துள்ளார்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்த நிலையில்,அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த ஜாமீன் மனு தள்ளுபடி நேற்று நடந்தது.. அந்த நேரத்தில் விருதுநகரில் ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தது. முன்ஜாமீன் மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது என்று தெரிந்ததுமே, ராஜேந்திர பாலாஜி உடனே, ஆர்ப்பாட்டம் முடிந்ததுமே அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பி விட்டாராம்.. ஆனால் அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.. ஒருவேளை முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால், ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கை இருக்குமோ என்று எண்ணி சட்டென்று கிளம்பியதாகவும், கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர் தலைமறைவும் ஆகியிருக்கக்கூடும் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

கைது நடவடிக்கையா?
இதனிடையே காணாமல் போன ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.. அவர், பெங்களூருவில் தலைமறைவாகி உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி, அந்த தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களுருக்கும் விரைந்துள்ளது.. எனவே, ராஜேந்திரபாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் கசிகின்றன.

பேட்டி
இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னையில் செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.. அப்போது, "தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு.. உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான்.,.. ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இல்லை, தான் தலைமறைவாக இருப்பதாக அவர் யார்கிட்ட சொன்னார்? சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்... ராஜேந்திரபாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும்" என்று கூறியுள்ளார்.

தீவிரம்
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ்குமார் (47) ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், எஸ்.பி. அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூவரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications