அதிமுகவின் "ஏக்நாத் ஷிண்டே"வா? கேள்விக்கு எஸ்பி வேலுமணி தந்த "விரிவான பதில்" இது-முடிவு உங்க கையில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுக்காக அண்ணா திமுகவுக்கு துரோகம் செய்யும் "ஏக்நாத் ஷிண்டேவா" நீங்கள் என்ற கேள்விக்கு அக்கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரிவான விளக்கம் தந்துள்ளார்.

பாஜகவுடனான நெருக்கத்தால் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உருவாக்கப்படுகிறார் என சில ஊடகங்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

 Ex Minister SP Velumani explains on AIADMKs Ekhnath Shinde?

யார் பிரச்சனையை கிளப்புவது?: இதற்கு எஸ்.பி.வேலுமணி தந்த பதில் முழுமையாக வரிக்கு வரி அப்படியே.. : என்னை அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என கூறி யார் பிரச்சனையை கிளப்புவது? பத்திரிகை நண்பர்களுக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த பிரச்சனையை யார் கிளப்புறது? இந்த பிரச்சனை எங்கிருந்து வருது? இங்கிருக்கக் கூடிய அத்தனை பேரும்.. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அத்தனை பேரும்- அத்தனை தொண்டர்களும்.. தொண்டர்களால் தான் சட்டமன்ற உறுப்பினராகின்றனர். எம்பியாகின்றனர்.

தலைவர் எடப்பாடியார்: அத்தனை பேருமே பார்த்தீங்கன்னா ஒட்டுமொத்தமாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வளர்த்த இயக்கம், அதுமட்டும் அல்ல.. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவர் அம்மா... அதற்கு பின்னர் இந்த கட்சிக்குத் தலைவர் எடப்பாடியார் (எடப்பாடி பழனிசாமி).

 Ex Minister SP Velumani explains on AIADMKs Ekhnath Shinde?

திமுக ஐடி விங்: ஆகவே நிறைய பேர் என்ன நினைக்கிறாங்கன்னா.. எப்படியாவது ஏதாவது ஒன்னு பண்ணி குளிர்காய நினைக்கிறாங்க.. இது திமுக.. திமுக ஐடிவிங் தெளிவாக இருக்கு. அதுல நிறைய பேர் இருக்காங்க.. அதுக்கு நிறைய பத்திரிகையாளர் இருக்காங்க..

7,000 ஆடு விவகாரம்: இன்னும் சில பத்திரிகைகாரங்க இருக்காங்க.. நான் பேரை சொல்ல விரும்பவில்லை. அந்த ஓனர் கூட வேண்டியப்பட்டவர்தான்... ஒரு ஸ்டோரி மாதிரி போட்டிருக்காங்க.. அதை எல்லாம் நான் படிக்கிறதே இல்லை.. அது ஒரு வார புத்தகம். நான் 7,000 ஆடு வெட்டுறேன்.. கல்யாணத்துக்குன்னு சொல்லி போட்டிருக்காங்க.. உங்க எல்லாத்துக்கும் தெரியும்.. எல்லாருமே "நல்ல" குடும்பத்தில இருந்து வந்தவங்கதான்.. எல்லாத்துக்கும் அவங்க அவங்க குடும்பம் இருக்கு. நிகழ்ச்சிகள் நடக்கும்.

 Ex Minister SP Velumani explains on AIADMKs Ekhnath Shinde?

அந்த ஒரு பத்திரிகையாளர்: திருமண பத்திரிகை கொடுக்க ஆரம்பித்தாலே.. பத்திரிகை கொடுக்க ஆரம்பிச்சிட்டாலே நாங்க எல்லாம் நான் வெஜ் சாப்பிடமாட்டோம்.. எப்படின்னு உங்களுக்கே தெரியும்.. அந்த மாதிரி சூழ்நிலை.ஆனால் ஒரு மனசாட்சி இல்லாம... அந்த பத்திரிகையில ஒருத்தர் இருக்கார்.. எப்பவுமே என்னைப் பற்றி எனக்கு தெரிஞ்சு இந்த 10 வருஷமாக எழுதிகிட்டே இருப்பார். ஏன்னா இது எல்லாம் திமுகவோட பேக். அந்த பத்திரிகையும் பேக். அந்த ஓனர் எனக்கு கொஞ்சம் வேண்டியப்பட்டவரா இருந்தாலும் கூட அந்த பத்திரிகை மட்டுமல்ல.. அதுக்குள்ள ஒரு நபர் கம்பல்சரி எழுதுவார். அதேபோல இன்னொரு பத்திரிகை.. 2 பத்திரிகை.

வெஜிடேரியன்தான்: இதுவந்து பார்த்தீங்கன்னா இது ஒரு மனசாட்சியே இல்லாம ஒரு கதையை விட்டு இந்த பத்திரிகை வந்து பரபரப்பாக விற்கப் பார்க்கிறாங்க.. 7.000 ஆடு வெட்டுறேன்னு சொல்லிட்டு.. நம்முடைய பகுதியில் அந்த மாதிரி எல்லாம் இருக்கா..கல்யாணத்துல விருந்துல எல்லாமே வெஜிடேரியன்தான் பண்ணுவோம். இப்படி ஒன்னை ஒருத்தர் கிளப்பிவிடுறாங்க..

ஏக்நாத் ஷிண்டேவின் துரோகம்: அதேபோல தம்பி கேட்ட மாதிரி, ஏக்நாத் ஷிண்டேங்கிறது.. எந்த கட்சியாக இருக்கட்டும்.. எப்படி பார்த்தாலும் அவரு கட்சிக்கு துரோகம் பண்ணிருக்காரு.. கரெக்டா.. அது ஒருபக்கம்.. அதுக்குள்ள போகலை. என்னைப் பொறுத்தவரைக்கும் 1972-ல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு, என் தந்தை காலத்தில் இருந்து கட்சி குடும்பத்தில் இருந்து வந்தவன். அதுமட்டுமல்ல முழுமையாக நான் பர்ஸ்ட்டே சொல்லிட்டேன்.. நான் முழுமையாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவர் அம்மா.. அதே இடத்தில் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார்தான் எங்களுக்கு தலைவர். அதுமட்டுமல்ல கழகத்தின் பொதுச்செயலாளர். முழுமையாக அவர் பின்னாடி இருக்கிறோம். எதாவது ஒரு குழப்பம் பண்ணனும் பார்க்கிறாங்க.. எதாவது ஒன்னு.. என்ன குழப்பம் நடத்த நினைச்சாலும் திமுகவும் சரி அவங்களை சேர்ந்த ஊடகங்களும் சரி எதுவும் நடக்கப் போறது இல்லை.

அதிமுகவில் இருந்து பிரிக்கவே முடியாது: நான் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கிறோம். நான் அதிமுககாரன். என் குடும்பமே அதிமுக குடும்பம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் அதிமுக ஜெயிக்கும். பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என எடப்பாடியார் சொல்லிவிட்டார். அதனை இவர்களால் தாங்க முடியவில்லை. அதனால் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. எடப்பாடியார் துரோகங்களை முறியடித்தவர். அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல யாரையும் பிரிக்க முடியாது. இவ்வாறு எஸ்.பி. முழுமையான விளக்கம் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+