முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.. வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. ரெய்டை தொடர்ந்து விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர ரெய்டு நடத்தி வருகிறது. ஐபிஎஸ் கந்தசாமி ஊழல் மற்றும் லஞ்ச துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டதில் இந்த ரெய்டுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ரெய்டு

ரெய்டு

முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்ததாகவும், பல்வேறு முறைகேடுகளை கடந்த ஆட்சியில் மேற்கொண்டதாகவும் புகார் உள்ளது. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோர் வீடுகளில் கடந்த வாரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த நிலையில்தான் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்து வருகிறது. புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று விஜயபாஸ்கர் அதிமுக பொன் விழா ஆண்டு விழாவிற்காக சென்னை சென்று இருந்தார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை இந்த ரெய்டு அதிரடியாக நடத்தப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் ரெய்டு

விஜயபாஸ்கர் ரெய்டு

இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு உள்ளாகும் 4வது முன்னாள் அமைச்சராகி உள்ளார் விஜயபாஸ்கர். வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக தற்போது வழக்கு பதியப்பட்டு உள்ளது. ரெய்டுக்கு இடையில் உடனடியாக வழக்கு பதியப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் மற்றும் அவரின் மனைவி மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. 2016ல் இருந்து 2021 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

லஞ்சம்

லஞ்சம்

லஞ்ச பணத்தில் மூலம் அறக்கட்டளை தொடங்கி முறைகேடாக பணம் வாங்கியதாகவும். முறைகேடாக அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 27 கோடி ரூபாயை முறைகேடாக சொத்து சேர்த்ததாக இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த பணம் மூலம் நடத்தி வந்ததும். அதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டியதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

 2017 ரெய்டு

2017 ரெய்டு

ஏற்கனவே கடந்த 2017ல் இவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அதிகமாக சொத்து சேர்த்ததாக இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்ட நிலையில் இந்த சோதனை நடந்தது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இங்கு சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய தகவல்கள், முறைகேடுகள் வெளியே வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+