நானும் பொது குழு உறுப்பினர்.. அதிமுக வேட்பாளருக்கான சுற்றறிக்கை கிடைக்கவில்லை- மைத்ரேயன் ஆதங்கம்
அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என மைத்ரேயன் ஆதங்கம்
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரை எனக்கு கிடைக்க பெறவில்லை என முன்னாள் எம்பியும் பொதுக் குழு உறுப்பினருமான மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அது போல் செந்தில் முருகன் போட்டியிடுவார் என ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் இரட்டை இலை கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழ்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து பொதுவான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நாளைய தினம் அதை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் சுமார் 2,675 பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனுப்பி வைக்கப்பட்டு பொதுக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மகன் உசேன்
இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதை போல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இன்று மாலை 7 மணிக்குள்ளாக எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விவரத்தை ஓபிஎஸ் தெரிவிக்க வேணடும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அதிமுக வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்பீடு போஸ்டிலும் அனுப்பியிருக்கிறோம். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. அவருடைய இமெயிலில் இருந்து மெசேஜ் கொடுத்துள்ளோம். கடிதத்தை நேரடியாகவும் தலைமைக் கழக ஊழியர்கள் கொடுத்து இருக்கிறார்கள். எனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை 100 சதவீதம் முழுமையாக பின்பற்றியிருக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்
ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். வரும் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளாகும். எனவே அதற்குள் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். பாஜக எங்களுக்கு ஆலோசனைகளை சொல்கிறது, அது தலையீடு இல்லை, தலையீடு வேறு அறிவுரை வேறு, அறிவுரையை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் எங்கள் விருப்பம் என கூறியிருந்தார். அனைவருக்கும் வேட்பாளர் தேர்வுக்கான சுற்றறிக்கை அனுப்பிவிட்டாச்சு என ஜெயக்குமார் கூறுகையில் மைத்ரேயனோ வேறு மாதிரி கூறுகிறார்.

மைத்ரேயன் ஆதங்கம்
இதுகுறித்து முன்னாள் எம்பி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் ஒரு கழக பொதுக்குழு உறுப்பினர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி இதுவரை - பிப்ரவரி மாதம் 05 ம் தேதி மாலை 4.11 வரை எனக்கு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. இப்படிக்கு டாக்டர் வா. மைத்ரேயன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், கழக பொதுக்குழு உறுப்பினர் என தெரிவித்துள்ளார். மைத்ரேயன் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியதும் அவர் பக்கம் இருந்தார். பின்னர் அதிமுதவில் ஒற்றை தலைமை பிரச்சினையின் போதும் கூட ஓபிஎஸ்ஸுடன்தான் இருந்தார். இந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி அணி பக்கம் தாவி ஜூலை 11 பொதுக் குழுவில் கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே வந்துவிட்டார்.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications