ஐயோ செங்கோட்டையன் மைன்ட் வாய்ஸ்னு நெனச்சு ஆதவ் பற்றி சத்தமா பேசிட்டாரே! கொளுத்தி போட்ட திமுக Ex MP

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் மைன்ட் வாய்ஸ் என நினைத்து சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா குறித்து பேசியதாக திமுக முன்னாள் எம்பி செந்தில் குமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் இன்று ஓர் அமைச்சர் இல்லை., அவர் டெல்லி சென்றுள்ள நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் mind voice என நினைத்து சட்டமன்றத்தில் பேசி அதை பதிவும் செய்து விட்டார்.

sengottaiyan aadhav arjuna

இதை தான் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் சட்டமன்றத்தில் ஒருவரை குறிப்பிட்டு சபையில் அந்த ஓர் நபரால் தான் தேவையில்லாத பிரச்சனை என பதிவு செய்துள்ளார்.

சட்டசபையில் நேற்றைய தினம் எம்எல்ஏக்கள் முஸ்தபா, திமுகவை அட்டாக் செய்து பேசிய போது திமுக எம்எல்ஏக்கள் கொந்தளித்தனர். அப்போது பேசிய செங்கோட்டையன், அவர்களை அமைதி காக்குமாறு கூறினார்.

மேலும் செங்கோட்டையன் பேசுகையில், "இன்னைக்குத்தான் அவை கொஞ்சம் நல்லாருக்கு.." என பேசியிருந்தார். ஆதவ் அர்ஜுனா அவையில் இருந்தாலே பிரச்சனை என பல்வேறு தரப்பினரும் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேபாள வெள்ளத்தில் பாதித்த தமிழர்களை மீட்பதற்காக டெல்லிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்றுள்ளார். அதைத்தான், "ஆதவ் இல்லாத நிலையில் அவையில் எதற்கு சண்டை" என்பதை கேட்காமல் அவர் கேட்டுள்ளார்.

சட்டசபையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஆரோக்கியமாக செயல்பட்டு கொண்டிருந்தாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்துவிட்டாலே பிரச்சனைதான் என ஒரு பேச்சு எழுகிறது. அவர் திமுகவை கடுமையாக விமர்சிப்பதும் அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதும் இப்படியே மாரி மாறி பேச்சு வளர்ந்து கொண்டே இருப்பதால் அவை நடவடிக்கைகளை அன்றைய மானியக் கோரிக்கைகளை விட்டுவிட்டு வேறு ரூட்டில் செல்கின்றன என்கிறார்கள்.

sengottaiyan aadhav arjuna

இந்த விஷயத்தை பிரேமலதா விஜயகாந்த் போட்டு உடைத்துவிட்டார். நேற்றைய தினம் பேசுகையில், "சட்டசபையில் மானியக் கோரிக்கையை தவிர்த்து அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டிக் கொள்வதால் மக்களுக்கு என்ன பயன், இது சட்டப்பேரவையா இல்லை சண்டை பேரவையா?

பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை அவை நடவடிக்கைகள் அமைதியாக போகின்றன. அவர் பேசினால்தான் சண்டை ஏற்படுகிறது. எனவே அவருக்கு வாய்ப்பளிக்காதீர்கள்" என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

அது போல் நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் பிரேமலதா பேசுகையில், "தம்பி ஆதவ் இல்லை, அதனால் நான் எனது பேச்சை 10 நிமிடத்தில் முடித்துவிட்டேன். அவையை 1.30 மணிக்கு முடிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். எனவே அவை நடவடிக்கைகளும் சீக்கிரம் முடிந்துவிடும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+