கிளாஸ் ரூமிலேயே.. கைகளை பிளேடால் கிழித்து.. தூக்கில் தொங்கிய பேராசிரியை.. சென்னையில் பரபரப்பு!
கிளாஸ் ரூமில் கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: தான் பாடம் நடத்திய கிளாஸ் ரூமிலேயே.. கைகளை பிளேடால் கிழித்தும், ஃபேனில் தூக்கு போட்டு தொங்கியும் தற்கொலை செய்து கொண்டார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியை ஒருவர்!
சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி. இங்கு பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ஹரி சாந்தி.
தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராக வேலை பார்த்தார்.. ஆனால் 5 வருஷத்துக்கு முன்பே பணியில் இருந்து நின்றுவிட்டார். காலேஜில் வேலை பார்த்தபோதே, ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதி, அதற்கான பணியும் பெற்று பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார். இருந்தாலும் காலேஜ்-க்கு அடிக்கடி வந்து நண்பர்களிடம் பேசிவிட்டு செல்வதாக தெரிகிறது.

முதல்மாடி
இந்நிலையில், இன்று காலை முன்னதாகவே காலேஜ் வந்தார் ஹரிசாந்தி.. மாணவிகள், பிற ஆசிரியர்கள் யாருமே அப்போது காலேஜில் இல்லை.. தான் ஏற்கனவே வேலை பார்த்தபோது, பாடம் நடத்திய கிளாஸ் முதல் மாடியில் உள்ளது.. அந்த கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தார்.

ஹரிசாந்தி
அங்கேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.. கொஞ்ச நேரத்தில் மாணவிகள் கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தனர்.. அப்போதுதான், ஹரிசாந்தி டீச்சர் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.. டீச்சரின் கையில் பிளேடால் கிழிக்கப்பட்ட ரத்தம் கொட்டி கொண்டிருந்தது.. இதை பார்த்து பதறிகொண்டு ஓடிபோய் உடனடியாக நிர்வாகத்துக்கு தகவல் சொல்லவும், போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதிர்ச்சி
விரைந்து வந்த போலீசார் ஹரிசாந்தி உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவத்தினால் கல்லூரியில் வேலை பார்க்கும் பிற பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக காலேஜ்-க்கு லீவு விடப்பட்டு, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பட்டனர்.

விசாரணை
தற்கொலைக்கு காரணம் என்ன, எதற்காக ஹரிசாந்தி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை.. இது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். இவருக்கு கல்லூரி நிர்வாகத்துடன் ஏதாவது பிரச்சனையா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்கள்
நேற்றுகூட காலேஜ் வந்துள்ளார் ஹரிசாந்தி.. அங்கிருந்த பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோரை சந்தித்து ரொம்ப நேரமாகவும் பேசி கொண்டிருந்திருக்கிறார். ஆனால் காலேஜ் முடிந்த பின்பும் ஹரிசாந்தி புறப்படாமல் அங்கேயே தொடர்ந்து நண்பர்களிடம் பேசியபடி இருந்தாராம்.. அதனால் அவர் யார் யாரிடம் பேசினார் என்றும் விசாரித்து வருகிறார்கள்.

பரபரப்பு
தற்கொலை செய்துகொண்ட ஹரிசாந்தி, திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவராம்.. 32 வயதாகிறது.. ஆனால் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தந்தையை இழந்த இவர், அம்மா, தங்கையுடன்தான் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கல்லூரியின் முன்னாள் பேராசிரியை திடீரென்று கல்லூரிக்கு வந்து கிளாஸ் ரூமிலேயே தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications