குடும்பத்தில் பிரச்சினைனு வந்த மாணவியின் மார்பில் கை வைத்த சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்பத்தில் பிரச்சினை என கூறிய மாணவியின் மார்பில் கை வைத்து கஷ்டத்தை வெளியே எடுப்பதாக கூறி சிவசங்கர் பாபா சில்மிஷம் செய்ததாக முன்னாள் மாணவி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

Recommended Video

    Sivasankara Baba-வை CBCID கைது செய்தது எப்படி ? பரபரப்பு பின்னணி

    இதுகுறித்து கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் முன்னாள் மாணவி நக்கீரனுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் நான் 9, 10, 11 ஆம் வகுப்புகளை 2009- 2012-ஆம் ஆண்டு அந்த பள்ளியில்தான் படித்தேன். அந்த பள்ளியில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இருக்கும்.

    இதனால் பார்ப்பதற்கே நல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். அந்த பள்ளி வளாகத்தை பார்த்தால் இது போல் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது மாதிரியான ஒரு தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தாது. அந்த அளவுக்கு வளாகம் தெய்வீக மணத்துடன் இருக்கும்.

    கிருஷ்ணர்

    கிருஷ்ணர்

    இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, இவரைத்தான் சாமியாக நினைத்து நிறைய பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவரை சாமியாக நிறைய பேர் வழிபடும் அளவுக்கு என்ன செய்கிறார் என தெரியவில்லை. முருகன் என்னிடம் இதை சொன்னார், கிருஷ்ணர் என்னிடம் அதை சொன்னார் என பக்தர்களிடம் சொல்வார்.

    பள்ளி மாணவர்கள்

    பள்ளி மாணவர்கள்

    64 ஏக்கர் கொண்ட அந்த வளாகத்தில் பள்ளி, மாணவர்கள் தங்கும் விடுதி, அவரது பக்தர்கள் தங்குமிடம் என அனைத்தும் ஒரு சேர இருக்கும். இத்தனை விஷயங்கள் வெளியே வந்த பிறகும் அவரை கடவுளாகவே அவரது பக்தர்கள் பாவிக்கிறார்கள். அங்கு சிவசங்கர் பாபாவின் பக்தர்கள் நிறைய பேர் படிக்கிறார்கள்.

    டான்ஸ்

    டான்ஸ்

    சுவாமியுடன் டான்ஸ் ஆடுவதாகவும் சுவாமி தன்னுள் வந்துவிட்டதாகவும் கூறி மக்களை ஏமாற்றுவார். அங்கு தங்கியுள்ள மாணவர்கள், பக்தர்களுக்கு என மாலை வேளைகளில் சத்சங்கம் நடத்துவார். அவர் மாணவிகளை பார்த்தால் உடனே கட்டி பிடித்து முத்தம் கொடுத்துவிடுவார். இது போல் பெற்றோர் வந்தாலும் கொடுப்பார்.

    கட்டிப்பிடித்தல்

    கட்டிப்பிடித்தல்

    ஆனால் பெற்றோர் வரும் போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்கும் அவர்கள் இல்லாத போது கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கும். மாணவர்களுக்கு கைகளை மட்டுமே குலுக்குவார். ஒவ்வொரு வகுப்பறையிலும் பாபாவின் பக்தர்களில் மாணவர், மாணவி என தலா ஒருவர் வேவு பார்ப்பர்.

    மாணவிகள்

    மாணவிகள்

    மாணவிகளிடம் பாபா செய்யும் பாலியல் அத்துமீறல்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் யாரிடமாவது பகிர்ந்து கொள்கிறார்களா என வேவு பார்ப்பர். நான் படித்து முடித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை என் வகுப்பில் அந்த உளவாளி யார் என எனக்கு தெரியாது. ஒரு வேளை பாபா குறித்து தவறாக பேசிவிட்டால் அந்த மாணவருக்கோ மாணவிக்கோ மதிப்பெண்களை குறைத்துவிடுவார்கள்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    பின்னர் பெற்றோரை வரவழைத்து நம்மை பற்றி தவறாக பேசுவார்கள். பெற்றோருக்கு அவர்களது குழந்தைகள் மீது நம்பிக்கை வராத மாதிரி செய்துவிடுவார்கள். ஹாஸ்டலில் படிக்கும் மாணவி ஒருவர் ஒரு நாள் காரிடாரில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தார். நான் என்ன என கேட்டேன். அதற்கு அவர் நீண்ட நேரம் கழித்து என்னிடம் சொன்னார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    "என் குடும்ப கஷ்டங்களை நான் பாபாவிடம் சொன்னேன். அப்போது பாபா என் கண்களை மூட சொல்லி, என் கஷ்டங்களை வெளியே எடுப்பதாக கூறினார். உடனே நான் கண்களை மூடினேன். என் மார்பகத்தில் கை வைத்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்ததது. பின்னர் உன் கஷ்டத்தை போக்கிவிட்டேன் என கூறி என்னை வெளியே அனுப்பிவிட்டார். நான் ஹாஸ்டல் வார்டனிடம் கூறினேன், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நான் சொல்வது பொய் என கூறிவிட்டார்" என அந்த மாணவி கூறினார்.

    விடுதி மாணவிகள்

    விடுதி மாணவிகள்

    பொதுவாக சிவசங்கர் பாபாவின் குறி விடுதி மாணவிகளாகவே இருக்கும். அதிலும் சிங்கிள் பாரன்ட் இருப்பவர்கள், எந்த விஷயத்தையும் வெளியே சொல்லாத மாணவிகள், ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்டவர்கள். இவர்களைத்தான் குறி வைத்து பாபா பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவார் என அந்த மாணவி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+