Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 ரூபாயை விடுங்க.. இனி உங்க வீட்டுக்கிட்டயே "இது" வருது.. தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி.. அபாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவுத்துறையின் அடுத்த அறிவிப்பு வரப்போகிறது.. இதை கேட்டதுமே, பொதுமக்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்து வருகின்றனர்.. என்ன காரணம்?
ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் உறுதிதந்திருந்தார்.. அதன்படியே, அதை நடைமுறைப்படுத்தியும் காட்டி வருகிறார்.

அதேபோல, ரேஷன் கடைகளில் எண்ணற்ற சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினமும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Excellent announcement and What are the uses of Tamil Nadu Government Mobile Cooperative Bank

கூட்டுறவு சந்தை: அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் வசதியாக, "கூட்டுறவு சந்தை" ("Co-Op Bazaar") என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த செயலி மூலம் 64 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டு, ஆர்டர் செய்யப்படும்போது, அவரவர் இருப்பிடங்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு 64 வகையான மளிகை பொருட்கள் வந்து சேரும் என்று கூறியுள்ளதால், இந்த அறிவிப்பு ரேஷன்தாரர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கூட்டுறவு வங்கிகள்: இந்நிலையில், அடுத்த அதிரடியை கூட்டுறவு துறை கையில் எடுத்துள்ளது.. அதாவது, கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு 4,453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பயிர்க் கடன், நகைக்கடன் உட்பட, 17 வகை கடன்கள் வழங்கப்படுகின்றன. தனியாருக்கு இணையாக, இணையதள வங்கி சேவை உள்ளிட்ட, டிஜிட்டல் சேவைகள், கூட்டுறவு வங்கிகளிலும் கிடைக்கின்றன..

ஆனால், கிராமங்கள், மலைப்பகுதிகளில் வசிப்போருக்கு வங்கி கணக்கு இருந்தாலும்கூட, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கவும், டிபாசிட் செய்யவும், வங்கிகளுக்கு நேரிலேயே சூழல் உள்ளது.. இவர்கள் மலைப்பகுதிகளில் வசிப்பதால், வீட்டில் இருந்து அதிக தூரம் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை வருகிறது.. இது பலருக்கு சிரமமாகவும் இருந்து வருகிறது. இந்த சிரமத்தைதான் தமிழக அரசு போக்க முன்வந்துள்ளது.

மொபைல் பேங்க்: அதன்படி, அனைவருக்கும் வங்கி சேவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கூட்டுறவு துறை சார்பில், "நகரும் கூட்டுறவு வங்கி" என்ற பெயரில், வீட்டிற்கு அருகிலேயே வங்கி சேவை அளிக்கும் வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாம்..
தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், 32 வாகனங்கள் வாயிலாக, இந்த மொபைல் பேங்க் அதாவது நகரும் கூட்டுறவு வங்கி சேவை துவங்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் வாகனத்தில், சிறிய அளவிலான ஏடிஎம் மிஷின் இருக்கும்.. வீட்டிற்கு பக்கத்திலேயே வரும் அந்த வாகனத்தில் உள்ள ஊழியர், ஏடிஎம்மில் கஸ்டமர்களின் விரல் ரேகையை பதிவு செய்து கொள்வார்.. பிறகு ஆதார் நம்பர் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்.. அதற்கு பிறகு பணம் தருவார்.. அதேபோல், வங்கி கணக்கிலும் பணம் செலுத்தலாம்.

கஸ்டமர்கள்: இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரிகள் சொல்லும்போது, வங்கி இல்லாத இடங்களை கண்டறிந்து, நகரும் வங்கி சேவை அளிக்கப்பட உள்ளது. அதில் பணம் எடுப்பது, பணம் செலுத்துவதுடன், எவ்வளவு பணம் வங்கியில் இருக்கிறது என்பதையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். அதேபோல புதிதாகவும் வங்கி கணக்கு துவக்கலாம்.

இப்போது, அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக, 4 - 5 வாகனங்கள் வாயிலாக, வீடுகளுக்கு அருகில் வங்கி சேவை அளிக்கப்பட உள்ளது. ஒரு நகரும் வங்கிக்கு, 16 லட்சம் ரூபாய் செலவாகும். இதனால், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியும். இதைத்தவிர, 750 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் ரேஷன் கடைகளில், சிறிய ஏடிஎம் வாயிலாக, பயிர்க்கடன்களும் வழங்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+