Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்.. எகிறியடிக்கும் தமிழ்நாடு அரசு.. ரெடியா இருங்க.. ஆயுத பூஜை வேற வந்துடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களின் வசதிக்காக, போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு அறிவிப்பை பயணிகளுக்காக வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

முன்பதிவு: குறிப்பாக, ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும்.

Excellent announcement by Tamil Nadu Transport Dept and 600 Special Buses for Ayudha Pooja

சிறப்பு பஸ்கள்: இதுபோல இன்னும் பல வசதிகளை போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, சிறப்பு பேருந்துகளையும் விடுமுறை நாட்களில் இயக்கி வருகிறது.. பொதுவாக, தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.

இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... இப்படி ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது. பொதுவாக இப்படி பண்டிகை காலங்களில் அனைத்து போக்குவரத்துகளிலம் மக்கள் கூட்டம் அலைமோதும்.. அதனால்தான், மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை: அந்தவகையில், இப்போதுகூட ஒரு அறிவிப்பு வந்துள்ளது.. ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டிசென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 600க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க போகிறார்களாம்.. அதற்கான முன்பதிவும் துவங்கிவிட்டது..

அடுத்த மாதம் 23ம் தேதி அதாவது, திங்கட்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னையில் இருந்து வெள்ளிக் கிழமை மாலை முதலே பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிடுவார்கள்.. ஏற்கனவே, ரயில்களில் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் பஸ்களையே நம்பி இருக்கிறார்கள்..

பயணிகள் மகிழ்ச்சி: அதனால்தான், பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த பஸ்களுக்கு முன்பதிவு துவங்கி உள்ளதால், விருப்பமுள்ள பயணியர் www.tnstc.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பானது, சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+