"துண்டு சேருதோ".. திமுகவில் சேரலயாமே.. பாஜகவில்தான் இருக்காராம் திருச்சி சூர்யா.. ஹைலைட் என்ன தெரியுமா

அடுத்த முதல்வர் அண்ணாமலைதான் என்று திருச்சி சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026-ம் ஆண்டு வரை அண்ணாமலை தான் பாஜக தலைவராக இருப்பார், அப்போது அண்ணாமலை முதல்வராகவும் இருப்பார்.. அதனை தொடர்ந்து இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர் தான் பாஜக தலைவராகவும் இருப்பார்.. நான் அண்ணாமலையின் "ஏ" டீம் தான் என்று பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார் திருச்சி சூர்யா.
வரிச்சியூர் செல்வம்.. மதுரையின் பிரபலமான ரவுடியாக அறியப்பட்டவர்.. கழுத்து நிறைய நகைகளுடன், நடமாடும் நகைக்கடையாக மக்களால் அறியப்பட்டவர்..!!!

கலர்புல் டிரஸ் போட்டுக் கொண்டு, சொகுசு கார்களில் வலம் வருவது இவரது பாணி. இவர் மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் இருக்கின்றன.. கடைசி நேரங்களில் போலீசாரின் என்கவுன்டரில் 3 முறை மிஸ். ஆகி எஸ். ஆனவர்.

பரிவட்டம்

பரிவட்டம்

2 வருடங்களுக்கு முன்பு, அத்திவரதரை தரிசிக்க, இவருக்கு "விவிஐபிக்கள்" பாஸ் தரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.. அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எந்த இடத்தில் இருந்து அத்திவரதரை தரிசித்தாரோ அதே பகுதியில் இருந்து வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை தரிசித்தார். அதுமட்டுமல்ல, அங்குள்ள பட்டாச்சாரியார்கள் அத்திவரதர் சன்னதி முன்பு ரவுடியை உட்கார வைத்து பட்டம், பரிவட்டம் கட்டி அர்ச்சகர்கள் முதல் மரியாதை தந்த வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருந்தன.

ஹெல்மெட்

ஹெல்மெட்

இந்த பரபரப்பைவிட, இதற்கு வரிச்சியூர் செல்வம் தந்ததாக சொல்லப்பட்ட விளக்கம்தான் பலராலும் கவனிக்கப்பட்டது. "அத்திவரதரை கும்பிட வாய்ப்பு கிடைக்காது. அதுக்காக போனேன். இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார் இருக்கு. நான் விவிஐபி இல்லையா? நான் இப்போ தாதா இல்லை, தாத்தா! நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். என்னை பத்தி தப்பு தப்பா எழுதறாங்க. அதனால பத்திரிகை ரிப்போர்ட்டர் ஆகணும்னு எனக்கு ஆசை. நான் செஞ்சது வெறும் 3,4 தப்புண்ணாலும் போலீஸ் போட்டது நிறைய வழக்கு" என்று பல்வேறு விஷயங்களை கூறியதாக செய்திகளும் அப்போது வெளியாகின.

ஹெல்மெட்

ஹெல்மெட்

இந்த பரபரப்பைவிட, இதற்கு வரிச்சியூர் செல்வம் தந்ததாக சொல்லப்பட்ட விளக்கம்தான் பலராலும் கவனிக்கப்பட்டது. "அத்திவரதரை கும்பிட வாய்ப்புக்கு கிடைக்காது. அதுக்காக போனேன். இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார் இருக்கு. நான் விவிஐபி இல்லையா? நான் இப்போ தாதா இல்லை, தாத்தா! நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். என்னை பத்தி தப்பு தப்பா எழுதறாங்க. அதனால பத்திரிகை ரிப்போர்ட்டர் ஆகணும்னு எனக்கு ஆசை. நான் செஞ்சது வெறும் 3,4 தப்புண்ணாலும் போலீஸ் போட்டது நிறைய வழக்கு" என்று பல்வேறு விஷயங்களை கூறியதாக செய்திகளும் அப்போது வெளியாகின.

லைம்லைட்

லைம்லைட்

இதற்கு பிறகு இவர், லைம்லைட்டில் அவ்வளவாக வராத நிலையில் திடீரென தற்போது சீனில் என்ட்ரி தந்துள்ளார்.. மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வம், வழக்கம் போல் நகைகளை அணிந்துகொண்டு, ஹெல்மெட் அணியாமல், பைக்கில் சென்றதால், அவர்மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்... இதையடுத்து, "தலைக்கவசம் அணியாமல் சென்ற ரவுடி மீது வழக்கு பதிவு" என்று செய்திகள் வெளியாகின.. இதுகுறித்து வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களிடம், "என்னை ரவுடி என்று சொல்ல வேண்டாம். கோமாளி என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்.. ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா அவரது ட்விட்டர் பக்கத்தில் "என்னை ரவுடி" என்று பதிவு செய்திருந்தார். அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார்" என்று கூறியிருந்தார்.

 வாய்ஸ் மெசேஜ்

வாய்ஸ் மெசேஜ்

வரிச்சியூர் செல்வம் சொன்னது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்தார் சூர்யா சிவா.. அதில், "என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வரிச்சியூர் செல்வமும், காயத்ரி ரகுராமும் இரவு நேரத்தில் ஒரு தோப்பில் சந்தித்ததாகவும் நான் போட்டிருந்தேன்... இது தொடர்பாக எந்த செய்தியில் அவரிடம் கேட்கவில்லை அவராகவே சூர்யா சிவா என்னிடம் பேசி மன்னிப்பு கேட்டார் பின்னாடி எடுத்து விட்டார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக வரிசையில் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வருகிறது. அந்த பேட்டியை பார்க்கவில்லை. 2 நாட்களுக்கு பிறகு, என்னுடைய வாட்ஸ் அப்புக்கு அவர் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில், ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரியாமல் சொல்லிவிட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

 நிஜம்தான்

நிஜம்தான்

நான் அவரிடம் நிஜமாகவே மன்னிப்பு கேட்கவில்லை. அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று சொல்லி அதற்கான ஆடியோவையும் வெளியிட்டார்... பாஜகவில் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததிலிருந்து தொடர்ந்து திமுக எதிர்ப்புகளை பதிவு செய்து தான் வருகிறேன். நான் திமுகவில் இணையும் அவசியம் இல்லை. நான் இன்று வரை பாஜக பிரமுகராக தொடர்கிறேன்... என்னுடைய ராஜினாமாவை பாஜக தலைமை இன்னும் எற்றுக்கொள்ளவில்லை. 2026-ம் ஆண்டு வரை அண்ணாமலை தான் பா.ஜ.க. தலைவராக இருப்பார். அப்போது தனிப்பெரும்பான்மையுடன் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.

கமலாலயம்

கமலாலயம்

அப்போது அண்ணாமலை முதல்வராக இருப்பார். அதனை தொடர்ந்து இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர் தான் பாஜக தலைவராகவும் இருப்பார். நான் அண்ணாமலையின் "ஏ" டீம் தான். அண்ணாமலைக்கு எதிராக எந்த விமர்சனம் வந்தாலும் அதற்கு முதலாவதாக நான் பதில் அளிப்பேன்" என்றார் சூர்யா. வரிச்சியூர் செல்வத்துக்கான பதிலடியாக இது எடுத்துக் கொள்ளப்பட்டாலும், பாஜகவில் தான் இன்னமும் தொடர்பாக சூர்யா சொல்லி உள்ளதுதான் இந்த பேட்டியில் கவனம் பெற்று வருகிறது.. சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியபோது, முக்கிய தகவல் ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டிருந்தார் சூர்யா.

 அன்பு தம்பி

அன்பு தம்பி

"நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி" என்று விலகலின்போது கூறியிருந்தார் திருச்சி சூர்யா.

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

ஆனால், இதற்கு அண்ணாமலை தரப்பில் பெரிதாக ரியாக்ட் எதுவும் செய்யவில்லை.. மேலும், திருச்சி சூர்யா திமுக பக்கம் தாவ போவதாகவும் செய்திகள் உலாவந்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், நிலவிவந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன், அண்ணாமலை மீதான நம்பிக்கையையும், பெருமிதத்தையும் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வெளிப்படுத்தி உள்ளார் சூர்யா.. இதையடுத்து, சூர்யா மீண்டும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி மறுபடியும் கமலாலய வட்டாரத்தில் ஒலிக்க தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+