Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. கரண்ட் பில்லில் அதிரடி? டக்குனு சாதிச்சிடுச்சே.. தமிழக அரசு ஜில் ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் கொளுத்த துவங்கிவிட்டது.. இந்த நேரத்தில் ஒரு அதிரடி ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் தந்து வருகிறது. என்ன அது?

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் இருந்து வருகிறது. எனினும், இதற்கான மின்சாரம் நமக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை.. அதனால்தான், மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

Excellent Arrangements by Tamil Nadu Electricity Board and Special arranges to meet electricity demand during summers


மெகாவாட்:
கடந்த வருடம் ஏப்ரல் அதாவது கோடையில் மின் தேவையானது, வரலாறு காணாத வகையில் 19387 மெகா வாட்டாக உயர்ந்தது.. மாநிலம் முழுவதும் மின்நுகர்வு 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்த நிலையில், சென்னையில் ஒருநாளைக்கு மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு எகிறியது.

எனினும், மத்திய மின் துறை அரசு ஒரு எச்சரிக்கையை, விடுத்திருந்தது.. அதன்படி 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியிருந்தது. இதையடுத்து, 2024 கோடை தேவையை சமாளிக்க, பரிமாற்ற முறையில் மார்ச் 1 முதல் மே 31 வரை மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய அழைப்பு விடப்பட்டுள்ளதாக தகவலும் வெளியாகியிருந்தது.

தமிழக அரசு: இப்போது விஷயம் என்னவென்றால், கோடை துவங்கிவிட்டது.. மத்திய அரசு எச்சரித்திருந்த காலமும் வந்துவிட்டது.. கடந்த ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்ட நிலையில், இனி ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் நமக்கு போதுமானதாக இருக்காது .. எனவேதான், 3,571 மெகா வாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம் தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது.. இதுஒரு குறுகிய கால ஏற்பாடாகும்.

மின்சார தேவை:
இன்னும் ஒரு மாதத்திற்குள் 4,321 மெகா வாட் வாங்கப்பட உள்ள நிலையில், இதில், 600 மெகா வாட் பரிமாற்ற முறையிலான மின்சாரமும், மீதி மெகாவாட்கள் மின் கொள்முதல் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மின்சாரத்தை, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற டில்லி மாநிலங்களிடம் இருந்து பெறப்பட உள்ளதாம்.. இந்த மின்சாரத்திற்கு பணம் எதுவும் தரப்போவதில்லையாம். அதற்கு பதிலாக, தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்கியதுமே, பரிமாற்ற முறையில் வாங்கப்படும் மின்சாரம் அந்தந்த மாநிலங்களுக்கே திரும்ப வழங்கப்பட்டுவிடுமாம்.. தமிழக அரசின் இந்த அதிரடிகளால், கோடை காலத்தில் நம்முடைய மின்தேவை பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

மின்வெட்டு: அதுமட்டுமல்ல, கடந்த வருடம் கோடை காலத்தில், மின்வெட்டு பிரச்னை அதிகரித்துவிட்டது.. இது திமுக அரசு மீதான விமர்சனத்தையும் கடுமையாகவே வெளிப்படுத்தி வந்தது..

முக்கியமாக எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பியபடியே இருந்தன.. தற்போது விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் இந்த மின்வெட்டு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் மையப்படுத்தி விவகாரத்தை கிளப்ப வாய்ப்புள்ளது.

எனினும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு வாய்ப்பு தந்துவிடாமல், அதேசமயம் பொதுமக்களின் மின்தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+