வாய்க்குள்ளயிருந்து "மீன்கள்" உயிரோடு வந்து விழுந்து.. குலுங்கி குலுங்கி மனோரமா அழுது.. பொக்கிஷ ஆச்சி
சென்னை: மனோரமா என்ற சொத்து, இந்த தமிழகத்துக்கு கிடைக்க, அந்த ஒரு ஆச்சரிய சம்பவம்தான் அடிப்படை காரணமாக இருந்திருக்கிறது.. என்ன நடந்தது?
கோபி சாந்தா, தன்னுடைய 12 வயதிலேயே நடிப்பு - பாட்டு - என அனைத்திலும் திறமைபெற்றதால், பள்ளத்தூர் பாப்பா என்று சொந்த ஊரிலேயே அழைத்தார்கள்.
ஆச்சரியம்: லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர், இவரது நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டார்.. உடனே தன் நாடகக்குழுவில் சேர்த்து கொண்டார்.. கவியரசர் கண்ணதாசன், தான் தயாரித்த படத்திலேயே முதன்முதலில் அறிமுகம் செய்தும் வைத்தார். பள்ளத்தூர் பாப்பா - மனோரமாவாக உருமாறினார்.

தன்னுடைய முதல் படமான மாலையிட்ட மங்கை படம் முடிகிறவரை, மனோரமா இயல்பாகவே இல்லை. படம் கடைசிவரை எடுக்கப்பட்டு, வெளியாகிவிட வேண்டும் என்ற பதைபதைப்புடனேயே இருந்துள்ளார்.. நல்லபடியாகவே படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
பாரகன் தியேட்டர்: முதல் நாள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று, சென்னை பாரகன் தியேட்டருக்கு மனோரமாவும், அவரது அம்மாவும் சென்றார்களாம்.. ஒரே கூட்டமாக இருந்திருக்கிறது.. இருந்தாலும், தன்னை யாரென்று அப்போது வெளிஉலகத்துக்கு தெரியாத நிலையில், கூட்டத்தோடு கூட்டமாக நின்று, டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்த்திருக்கிறார்கள்.. முதன்முதலில், தன்னுடைய உருவத்தை, திரையில் பார்த்ததுமே, பூரிப்பில் விக்கி விக்கி அழுதுள்ளார் மனோரமா..
சர்க்கஸ்: ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இவர் நடித்து கொண்டிருந்தார்.. அந்த சர்க்கஸ் நடக்கும்போது, ஒருவர் வாய் நிறைய தண்ணீரை ஊற்றிக்கொண்டு, அத்துடன் சில மீன்களையும் லபக் லபக்கன விழுங்கிவிடுவாராம். பிறகு, மறுபடியும் அதே மீன்களை வாயிலிருந்து திரும்ப எடுத்து சாகசம் செய்வாராம்.. ஒருநாள் அப்படித்தான், அந்த சர்க்கஸ்காரர் செய்திருக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, விழுங்கிய மீன்களை அவரால் எடுக்க முடியவில்லை.. வாயிலிருந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.
உடனே அந்த சர்க்கஸ்காரர், யாரோ மந்திரவாதி இப்படி என்னை, மந்திர கட்டு போட்டுள்ளார்.. துணிச்சல் இருந்தால் வெளியே வா என்று சத்தமாக கூறினாராம்.. உடனே அந்தக் கூட்டத்தில் இருந்து, நிஜமாகவே ஒரு மந்திரவாதி வெளியே வந்தார்..
ஆமாம், உன்னால் முடிந்தால், மந்திரக்கட்டை அவிழ்த்து உன்னை நீ காப்பாற்றிக்கொள் என்று சவால் விட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பி போய்விட்டாராம். சர்க்கஸ்காரரும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.. ஆனால், அந்த மீனை அவரால் கடைசிவரை, வாயிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை.
மனோரமா: இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மனோரமா, அந்த சர்க்கஸ் கம்பெனியில் இருந்து உடனே வெளியே வந்து விட்டாராம்.. இந்த நிகழ்வுதான், மனோரமாவை சினிமா பக்கம் திரும்ப வைத்துள்ளது.. இந்த சம்பவத்தை ஒருமுறை, பிரபல பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சமீபத்தில்கூட நிகழ்வு கூர்ந்திருந்தார்.
மனோரமாவை சந்திக்க அவரது வீட்டுக்குத் திருநங்கைகள் அடிக்கடி வருவார்களாம்.. அப்படி ஒருநாள் மனோரமாவிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 'கண்பார்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளிகளை பார்த்தால் எல்லாரும் அனுதாபப்படுகிறார்கள். ஆனால், எங்களை மட்டும் கேலி செய்கிறார்கள்.. நாங்களும் மனிதர்களே என்று ஏக்கத்துடன் சொல்லவும், மனோரமா கண்கலங்கிவிட்டார்..
ஆசை நிராசை: அந்த நிமிடத்திலிருந்து திருநங்கை கேரக்டரில் நடித்துவிட பெரிதும் ஆசைப்பட்டார்.. எல்லாருக்குமே எல்லா ஆசையுமே நிறைவேறிவிடுவதில்லையே.. கடைசிவரை நிராசையாகிவிட்டது.. ஆனாலும், மனோரமா தமிழ்சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.. இல்லாவிட்டால், 'மஞ்சள் குங்குமம்' படத்தின் ஷூட்டிங்கில் ஆபத்தான கட்டுவிரியன் பாம்பு கடித்தபோதும், அடுத்த நாளே ஷூட்டிங்கில் வந்து அதே உத்வேகத்துடன் பங்கேற்க முடியுமா என்ன ?? அதுதான் மனோரமா..!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications