Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே அசத்துதே.. தயா அழகிரி "டெல்லி" போறாரா? அழகிரி பட்ட பாடெல்லாம் வீணாகல.. அஞ்சா நெஞ்சன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவே திக்குமுக்காடி போயுள்ளது.. அதிலும் தென்மண்டல திமுகவில் புது எழுச்சி இனி தென்படும் என்று கனத்த நம்பிக்கையுடன் பூரித்து சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.. என்ன காரணம்?

கடந்த மார்ச் மாதம், அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, உதயநிதியை, தன் பெரியப்பா மு.க.அழகிரியை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருந்தார்.. இந்த சந்திப்பின்போதே நிறைய அனுமானங்கள் வலம்வந்தன..

உதயநிதி : ஒருவேளை உதயநிதியை முன்னால் அனுப்பிவைத்துவிட்டு, அதன்மூலம் தன்னுடைய ஆதரவையும் நெருக்கத்தையும் ஸ்டாலின் வெளிப்படுத்த முயல்கிறாரோ என்ற சந்தேகம் கிளப்பிவிடப்பட்டது.

Excellent Decision by DMK and what are the Durai Azhagiri, MK Azhagiris next Plan

அதுமட்டுமல்ல, கடந்த முறை மதுரை தொகுதிக்கு திமுகவிலேயே எத்தனையோ நபர்கள் முயன்றார்கள்.. ஆனால், கடைசி நேரத்தில், கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக சீட் ஒதுக்கிவிட்டது. துணை மேயர் பதவியையும் எம்பி வெங்கடேசன் ஆதரவாளருக்கே பெற்று தந்துவிட்டதாகவும் ஒரு பேச்சும் உள்ளது.. ஏற்கனவே மதுரை திமுக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடிவரும் நிலையில், மீண்டும் மதுரையை அழகிரி தரப்பினர் கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் திமுக மேலிடம் நினைப்பதாகவும் தெரிகிறது.

மறைந்த விரிசல்: இதனால், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஸ்டாலின் தரப்பு நம்புவதாக தெரிகிறது.

எனினும் அழகிரி - ஸ்டாலினின் நேரடி சந்திப்புகள் எதுவுமே நடைபெறாமல் இருந்த நிலையில், அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, தயாளு அம்மாள் பிறந்தநாளின்போது, மொத்த குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து கொண்டாடினார்கள். அப்போது முதல்வர் ஸ்டாலினும், அழகிரியும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சந்தித்து பேசியதாகவும் சொல்கிறார்கள்.. இதை உதயநிதி ஸ்டாலினும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.

அசைன்மென்ட்: இதையடுத்து, திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ள அழகிரியின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.. விரைவில் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு தரப்படும் என்கிறார்கள்.. எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்தால், அது தென்மண்டல திமுகவுக்கு பலத்தை பெற்றுதருவதுடன், தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும், என்று அழகிரியின் ஆதரவாளர்களும் பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

இதனால், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவருவதுடன், வளர்ந்து வரும் மதுரை பாஜகவையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்களாம்.. ஒருவேளை, மதுரை தொகுதியில் தயாஅழகிரிக்கு எம்பி சீட் வழங்கப்பட்டாலும், அதுவும் தங்களுக்கு பிளஸ் ஆக அமையும் என்று கணக்கு போட்டு வருகிறார்கள்..

மூத்த அமைச்சர்கள்: இப்படிப்பட்ட சூழலில், அழகிரிக்கு மேஜர் அசைன்மென்ட்கள் சில தரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இபபோதைக்கு மூத்த அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகளால், கடும் அதிருப்தியில் இருக்கிறதாம் திமுக மேலிடம்.. எனவே, 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை "கவனிக்கும்" பொறுப்புதான், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன..

காரணம், திமுகவில் அதிருப்தி எம்எல்ஏக்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்களாம்.. மாவட்ட வாரியாக சில அமைச்சர்கள், குறுநில மன்னர்களாகவும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது..

அவர்களுக்கு கீழேயே எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம்.. இதுதான், எம்எல்ஏக்களின் அதிருப்திகளுக்கு காரணமாக வெடித்துள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு கடிவாளம் போடுவதுடன், அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களை கூல் செய்யவும், அவர்களின் பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைக்கவும், தலைமை முடிவு செய்துள்ளதாம்.. இந்த பொறுப்பைதான், அழகிரியிடம் ஒப்படைக்க போகிறதாம்.

அதிருப்திகள்: எப்போதுமே அழகிரி அனைவருடனும் நெருங்கி பழகுபவர்.. அடிமட்ட தொண்டனும் மேலே உயர வேண்டும் என்று நினைப்பவர்.. அதுபோல் எத்தனையோ தொண்டர்களை, மேலே அழைத்தும் வந்திருக்கிறார்.. அதேசமயம், மரியாதையும் + பயமும் அழகிரியிடம் எப்போதுமே நிர்வாகிகளுக்கு உண்டு.. அதனால், அதிருப்திகளையெல்லாம் சரிக்கட்ட அழகிரியால் முடியும் என்று திமுக மேலிடம் ஒன்றுகூடி விவாதித்துள்ளது.

இதற்கு பிறகுதான், அமெரிக்காவில் மகள் அஞ்சுகம் வீட்டில் ஒரு மாதமாக தங்கியிருந்த அழகிரியை, தயாளு அம்மாள் பிறந்தநாளுக்கு அழைக்கவும், உடனடியாக கிளம்பி வந்து கலந்து கொண்டாராம். இப்போதுகூட அழகிரி, மதுரைக்கு செல்லவில்லை.. தயாநிதி வீட்டில்தான் சென்னையில் தங்கியிருக்கிறார்..

அஞ்சாநெஞ்சன்: ஒருவேளை இந்த அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் வளைக்க முற்படலாம்.. அந்த முயற்சிகளை முறியடிக்க அழகிரியால் முடியும் என்று திமுக கணக்கு போடுகிறது.

ஒருபக்கம் பாஜக எழுச்சியை தடுத்து, மறுபக்கம் எம்எல்ஏக்களை சரிகட்டி, இன்னொரு பக்கம் சீனியர்களுக்கு கடிவாளம் போட்டு, ஒரே கல்லில் 3 மாங்காய்கள் விழக்கூடம் என்றும் தெரிகிறது.. விரைவில் இதற்கான பொறுப்புகள் அழகிரியிடம் ஒப்படைக்கப்படுவதுடன், அதையெல்லாம் "அஞ்சாநெஞ்சன்" அசால்ட்டாக செய்து முடிப்பார் என்றும் நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!!

எம்பி பதவி: இதனிடையே இன்னொரு தகவலும் பரபரத்து வருகிறது. துரை தயாவுக்கு மதுரையில் சீட் தரப்படலாம் என்கிறார்கள்.. கருணாநிதி இருந்தபோது, தென்மண்டலங்களை பற்றி கவலையேப்பட மாட்டார்.. எல்லாவற்றையும் அழகிரி கவனித்து கொள்வார் என்று பெருத்த நம்பிக்கையில் விட்டுவிடுவார். அதுபோல, தென்மண்டலத்தில் திமுகவின் வாக்குகளை உயர்த்தும் பணியில் அழகிரி களமிறக்கப்படுவதாகவும் தெரிகிறது. எப்படி பார்த்தாலும், துரைக்கு ஒரு எம்பி சீட் கன்பார்ம்டு என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+