Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை சீண்டிய அண்ணாதுரை.. "தாமரையில் மீண்டும் மலர்கிறதா அதிமுக"? எக்ஸ்பர்ட் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாதுரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சீண்டியதால்தான் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டோம் என அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணிய அதிமுக முறித்துக் கொண்ட நிலையிலும் நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி திமுகவை மட்டுமே விமர்சித்து பேசினாரே தவிர அதிமுகவை விமர்சிக்கவே இல்லை. இதனால் அவர்களுக்குள் மீண்டும் கூட்டணி பூத்துக் குலுங்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

Exclusive: AIADMK Babu Murugavel says that We ousted BJP because of Annadurai

இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு கூறியிருப்பதாவது: எங்கள் தயவு பாஜகவுக்கு தேவை என்பதால்தான் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பாஜக கூட்டணி: ஆனால் எங்களுக்கு அவர்களின் தயவு தேவை இல்லை என்பதால் பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டோம். எவ்வளவு பெரிய தாக்கத்தை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்த அரசியல் இயக்கத்திலேயும் தமிழ்நாட்டு மண்ணிலேயும் விதைக்கிறார்கள் என்பது மோடி அவர்களின் வாயில் இருந்து வந்திருக்கிறது.

எம்ஜிஆர் ஆட்சி: இதையெல்லாம் தாண்டி இன்று யார் அரசியலுக்கு வந்தாலும் எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம் என்றுதான் சொல்கிறார்களே ஒழிய கருணாநிதி ஆட்சியை தருகிறோம் என ஒருவரும் சொன்னது கிடையாது. எம்ஜிஆரின் வாரிசுகள் நாங்கள் இருக்கிறோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

மோடி பாராட்டுகள்: எம்ஜிஆர் ஆட்சியை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்து கொடுப்போம். இதையெல்லாம் தாண்டி மோடியின் பாராட்டுகள் எதை தீர்க்கமாக சொல்கிறது என்று சொன்னால் தமிழகத்தில் உள்ள இயக்கங்களில் அதிமுக தூய்மையான இயக்கம். இதற்கு காரணம் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தூய்மையான ஆட்சியை வழங்கி இருக்கிறார்கள்.

அதிமுகவை ஆதரியுங்கள்: அவர்களின் வழியில் வந்தவர்களும் அது போன்றதொரு ஆட்சியை கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எங்களுக்கு உங்கள் வாக்கு இல்லை என்றால் நீங்கள் அதிமுகவை ஆதரியுங்கள் என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன். 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

புதிய கொடியில் தாமரை: அப்போது அதிமுகவுக்கென இயக்கம் இல்லை, கொடிகள் இல்லை சின்னமும் இல்லை. தொண்டர்கள் எல்லாம் ஒன்றுகூட ஒரு புதிய கொடியை நிர்மாணம் செய்தார்கள். கருப்பு, சிவப்பு நடுவிலே தாமரை பதித்த ஒரு கொடியை நிர்மாணம் செய்தார்கள். தமிழகம் முழுவதும் பட்டித் தொட்டிகளில் எல்லாம் கொடிகளை நட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி அந்த கொடிக் கம்பங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார், கொடிகளை தீயிட்டு கொளுத்தினார்.

அண்ணாதுரை: சமயோஜிதமாக யோசித்த எம்ஜிஆர், "தாமரை சின்னம் இருப்பதால்தானே நீங்கள் அந்த கொடிகளை கொளுத்துகிறீர்கள். அந்த கொடியில் நாங்கள் அண்ணாவை பதிக்கிறோம் என சொல்லி 1973 இல் தாமரையை வெளியேற்றிவிட்டு அண்ணாவை கொண்டு வந்தோம்.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: சரியாக 50 ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டு அண்ணாமலை மீண்டும் அண்ணாவை விமர்சித்து பேசினார். அந்த காரணத்தால் நாங்கள் மீண்டும் தாமரையை வெளியேற்றியுள்ளோம். அண்ணா எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அண்ணாவின் மூலமாக நாங்கள் தாமரையை வெளியேற்றி இருக்கிறோம்.

அண்ணாவை தொட்ட அண்ணாமலை: இதை தாண்டி அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். அந்த முறையில் அவருடைய இயக்கத்தை வளர்த்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதில் நியாயமும் இருக்கிறது. அதற்காக பெரும்புகழுடன் வாழ்ந்து மறைந்த பெரும் தலைவர்களை எல்லாம் கொச்சைப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். அதை தேசிய தலைமையும் அவரை கண்டிக்காமல் ஊக்கப்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வந்தனர்.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்: நாங்கள் அதை கேட்டுக் கொண்டு இருக்க முடியாது. இந்த மண்ணிற்காக போராடியவர்கள், சமூக நீதி, சமதர்மம், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்கள் அண்ணாவும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்! இவர்களை எல்லாம் தொடர்ந்து சிறுமைப்படுத்தும் விதத்தில் அண்ணாமலை பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இனி பாஜகவுடன் பயணிப்பது நியாயமாக இருக்காது என நாங்கள் விரும்பினோம்.

சிறுபான்மையின வாக்கு சதவீதம்: சிறுபான்மையின மக்கள் அதிமுகவுக்குத்தான் பெரும்பான்மையான அளவுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வாக்கு சதவீதம் சற்று குறையும் போது அதன் காரணம் என்ன என நாங்கள் அலசி ஆராய்ந்த போது பாஜகவுடன் நாங்கள் பயணிப்பதை சிறுபான்மையின மக்களும் விரும்பவில்லை. இந்த கருத்தையும் நாங்கள் உள்வாங்கிக் கொண்டுதான் இனி பாஜகவுடன் பயணம் செய்வது அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை இருக்காது என்று கருதினோம். மத்தியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும். மாநிலத்தில் ஆட்சி என வரும்போது சிறுபான்மையின மக்களின் அன்பும் ஆதரவும் அதிமுகவுக்கு மீண்டும் வேண்டும் என்ற காரணத்தினாலும் அவர்களுடன் கூட்டணியை முறித்துக் கொண்டோம். இவ்வாறு பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+