Exclusive: போயஸ் கார்டனில் இருந்தவர் தெருவோர டெய்லர் ஆன கதை.. பக்கத்து வீட்டு காசியை விரட்டினாரா ஜெயலலிதா?
சென்னை: சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் பெரும்பாலும் வாழக்கூடிய பகுதியான போயஸ் கார்டனில் பல வருடம் வாழ்ந்தவர்.. இன்று தெருவோர டெய்லராக இருக்கிறார் ஆழ்வார்பேட்டை காசி. தன்னை போயஸ் கார்டனில் இருந்து விரட்டியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் பெரும்பாலும் வாழக்கூடிய பகுதியான போயஸ் கார்டனில் 1960 முதல் 1990கள் வரை வாழ்ந்து வந்த ஆழ்வார்பேட்டை காசி தற்போது சாலையோரம் ஒரு டெய்லர் கடையில் வசித்து வருகிறார். எப்படி அவர் இந்த நிலைக்கு வந்தார் என்பதை நம் 'ஒன் இந்தியா தமிழ்' யூடியூப் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அதனை இப்போது பார்ப்போம்.

இது தொடர்பாக ஆழ்வார்பேட்டை காசி பேசுகையில், "நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கிவில்லை..எனக்கு இடம் விட்டாரக்ள்.. நான் ஏழை.. நான் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன்.. நான் துணை ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்ததால், அவர்களின் அனுமதி உடன் நான் அந்த இடத்தில் கொட்டகை போட்டேன்.. நான் 'கொட்டகை போட்ட போது எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. அவரும் இருந்து கொள்ள சொல்லிவிட்டார்..
சத்தியநாராயணன் என்பவரிடம் நான் சப் காண்ட்ராக்டராக வேலை செய்தேன்.. அவருடைய இடம் தான் போயஸ் கார்டனில் உள்ள எல்லா இடமும்.. சத்தியநாராயணன் என்பவர் தான் போயஸ் கார்டன் இடத்தையே பிளாட் போட்டு விற்றார்.. அந்த மாதிரி பிளாட் வாங்கியவர்கள் தான் இப்போது அங்கு இருக்கிறார்கள்.. சத்தியநாராயணன் பிளாட் போடும் முன்பு அந்த இடம் காடாக இருந்தது. உள்ளே இரண்டு நீச்சல் குளம் இருந்தது. ஐந்து வெள்ளைக்காரர்களின் வீடு இருந்தது. நான்கு வீடு இடிச்சாச்சு.. இப்பவும் ஒரு வெள்ளைக்காரர் வீடு இருக்கிறது. ரஜினி வீட்டுக்கு திரும்பும் போது, இரண்டாவது பில்டிங் தான் அந்த வீடு.. ரஜினி வீடு இருந்த இடம் எல்லாம் வெள்ளைக்காரர்களின் நீச்சல் குளமாக இருந்தது.. அந்த இடத்தை தான் சத்தியநாராயணன் வாங்கினார்.. அதன் பிறகே பிளாட் போடப்பட்டது. வீடுகள் வந்தது.
சத்தியநாராயணனின் அனுமதியுடன் ஒரு கொட்டகை போட்டேன்.. அந்த இடத்தை யார் வந்து கேட்டாலும் அவர் கொடுக்கவிலலை. அவர்களிடம் சத்தியநாராயணன், நம் கம்பெனியில் வேலை பார்த்தவர்கள் இருக்கட்டும் என்பார்.. என் வீடு (35) பக்கத்தில்தான் 36ம் நம்பரில் ஜெயலலிதா அவர்கள் இடம் வாங்கி வீடு கட்டினார்.. நான் 1960 முதல் 90 வரை போயஸ் கார்டனில் இருந்தேன்.. நான் இருந்தவரை சுற்றியிருந்தவர்களின் வீடுகளில் வேலை செய்தும், உதவி செய்தும் வாழ்ந்து வந்தேன்..
ஜெயலலிதா அவர்கள், நடிகையாக இருக்கும் போது அங்கு இடம் வாங்கி வந்தார். ஜெயலலிதாவும், அவரது அம்மாவும் அங்கு வந்து குடியேறினார்கள்.. என் வீட்டின் அருகில் சம்ப் இருக்கும். அதில் தண்ணீர் எடுத்து வந்து தெருவில் வைத்து தான் குளிப்பேன்.. அதை நடராஜனும் சசிகலாவும் வாக்கிங் போகும் போது பார்ப்பார்கள்.. சசிகலா மற்றும் நடராஜன் இருவருக்குமே என்னை நன்றாக தெரியும்.
போயஸ் கார்டன் முழுவதும் 80களில் வீடுகள் கட்டிவிட்டார்கள்.. எங்கள் வீட்டை சுற்றிலும் பங்களாக்கள் இருந்தன. எங்கள் வீடு மட்டும் கொட்டகையாக இருந்தது. அந்த இடம் அவர்களுக்கு அசிங்கமாக தெரிந்தது. இதனால் ஜெயலலிதா என்னை விரட்ட முயன்றார். அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார்.. நான் எம்ஜிஆரிடம் போய் முறையிட்டேன்.
அப்போது எம்ஜிஆர் அவரிடம் முடிந்தால் உதவி செய்.. யாருக்கும் உபத்திரம் செய்யாதே என்றார்.. நான் எம்ஜிஆரிடம் புகார் சொல்லிவிட்டேன் என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் எனக்கு யாரும் தண்ணீர் விடக்கூடாது என்று கூறினார். இதனால் நான் எம்ஜிஆரிடம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்..
உங்களுக்காகவே பார்க்கிறேன்.. இல்லாவிட்டால் 24 மணிநேரத்தில் ஜெயலலிதாவை அங்கு குடியிருக்கவிடாமல் செய்வேன் என்று மிரட்டினேன். மேலும் பசங்களை விட்டு அவரது கண்ணாடியை எல்லாம் உடைக்க வைத்தது உண்மை.. அதன்பிறகு அவர் என்னை காலி பண்ண வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் முதல்வராக ஆன பின்னர் என்னைத்தான் முதல் ஆளாக அங்கிருந்து காலி செய்ய வைத்தார்..எம்ஜிஆர் இருக்கும் வரை என்னை அவரால் காலி செய்ய முடியவில்லை.
என்னிடம் வேறு இடத்தில் இடம் வாங்கித்தருகிறேன்.. வீடு கட்ட உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தால் காலில் விழுந்து கும்பிட்டு நான் வெளியே போயிருப்பேன்.. ஆனால் அப்படி செய்யாமல் ரவுடிகளை வைத்து பார்த்தார்கள், அது முடியாது என்ற உடன், அரசியல்வாதிகளிடம் சொன்னார்கள்.. அவர்களும் முடியாது என்று சொன்னார்கள்..
கடைசியில் மதுசூதனன் உதவி செய்து அவரை அங்கிருந்து மாற்றுவோம் என்றார். அதன்படி அசோகா ஓட்டலில் வைத்து என்னிடம் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் பேசுகிறார்கள்.. யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க சொல்றீங்களோ.. நாங்கள் கொடுக்கிறோம் என்றார்கள். ஒரு லட்சம் பணம் கொடுத்தார்கள். நான் பணத்தை வாங்கவில்லை.. நான் அவர்களிடம் இந்த இடத்தை வாங்க போறீங்க அப்படீன்னா, இந்த இடத்தை கொடுக்குற ஆள் இடம் நான் பேசிவிட்டு சொல்கிறேன் என்றேன்..
அதன்பிறகு என் மீது கமிஷனர் ராஜசேகர் நாயரிடம் புகார் அளித்தார். என்னை அடிக்க வருகிறார். போடி வாடி என்கிறார் என்று கூறினார்.. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அவரை டிரான்ஸ்பர் செய்துவிட்டார் ஜெயலலிதா..அதேநேரம் சென்னை கமிஷ்னரிடம் வீடு காலி செய்ய வைக்க என்னை நம்பி உள்ள 15 குடும்பங்களை பற்றி கூறினேன். அவர்களுக்கு வேளச்சேரி ஏரி பக்கம் இடம் வாங்கி கொடுத்தார்.. எனக்கும் இடம் வாங்கி கொடுத்தார், அதன்பிறகே நான் அங்கிருந்து காலி செய்து வந்தேன்.
ஆனால் எனக்கு கொடுத்த இடத்தை டியூசன் சொல்லி கொடுப்பதாக ஒருவர் ஆக்கிரமித்து, ஜெபக்கூடம் ஆக்கிவிட்டார்.. அதன்பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அறிந்து அந்த இடத்தை போனால் போகிறது என்று நான் விட்டுவிட்டேன். நான் இப்போது வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறேன்" இவ்வாறு ஆழ்வார்பேட்டை காசி கூறினார். மேலும் பல்வேறு விஷயங்களை வீடியோவில் கூறியுள்ளார். அதனை வீடியோவில் பாருங்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications