தேமுதிக கிட்ட பேசுறதுக்கு பேசாம அங்கேயே போகலாமே! அதிமுக சீனியர்கள் பிரஷர்.. பிடிகொடுக்காத எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் சீனியர்கள் விரும்பவில்லை என தெரிகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷர் கொடுத்து வருவதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன் இந்தியா அரசியல் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவை அதிமுக வேண்டாம் என ஒதுக்கி ஓரங்கட்டியது.

Exclusive Edappadi Palanisamy is in a situation to make any alliance

இதனால் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து 60 இடங்களில் போட்டியிட்டு 0.4 சதவீதம் வாக்குகளை பெற்றது. துரோகிகளுடன் கூட்டணி கிடையாது என கூறிய டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததால் அந்த கட்சியும் கீழே போய்விட்டது.

நக்கல் நய்யாண்டி: அன்று நக்கல் நய்யாண்டி அடித்த அதிமுக இன்று தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதாவ முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் சந்தித்து பேசியுள்ளனர். எப்போதும் பாமக நிறைய இடங்களைத்தான் கேட்பார்கள்.

7+ 1 தொகுதிகளா: தற்போது பாஜக, புதிய நீதிக் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இல்லை என்பதால் கணிசமாக 7 சீட்டுகள் அதிமுக கூட்டணியிடம் கூடுதலாக உள்ளது. இதை வைத்து பாமக அதிக இடங்களை கேட்கும். 7+1 என்றெல்லாம் பாமக கேட்காது. கூடுதலாக உள்ள 7 தொகுதிகளுடன் 2 மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் சேர்த்து கேட்கும்.

மாநிலங்களவை எம்பி: ராஜ்யசபா சீட் தற்போது வாதத்திற்கு வராது, ஏனென்றால் ஏற்கெனவே பதவியுள்ள மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் இருக்கு. அதை மட்டும் வாங்கிக் கொண்டு பாமகவால் அரசியல் செய்ய முடியாது. அது போல் அதிமுகவும் தங்களிடம் உள்ள ஒரு எம்பி பதவியை கொடுக்காது.

ஜெயக்குமாருக்கு எம்பி பதவியா: ஏனென்றால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ராஜ்யசபா எம்பி பதவியை பெற காத்திருக்கிறார்கள். எனவே பாமக 10 மக்களவை தொகுதிகளுக்கு குறையாமல் கேட்கக் கூடும். ஆனால் அதிமுக கொடுக்கும் குறைந்த சீட்டுகளுக்கு பாமக பிடி கொடுக்காததால்தான் தேமுதிகவை போய் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.

பாமகவிடம் பேச்சுவார்த்தை: மீண்டும் பாமகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஒற்றைத் தலைமையானது அணி அமைப்பதில் அதிமுக திணறுகிறார்கள். அதிமுக- பாஜகவுடன் செல்லாது, எடப்பாடி மீது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட ரெய்டுகளும் நடத்தப்படாது. ஆனால் கட்சியினர் சிலர் பாஜகவில் கூட்டணி வைக்கலாம் என அழுத்தம் கொடுக்கிறார்கள்.

பாஜக கூட்டணி: அழுத்தம் கொடுக்கும் நபர்கள் இருக்கும் பகுதிகளில் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதால் பாஜக கூட்டணிக்கு செல்ல வற்புறுத்துகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தவிர்த்து வருகிறார். காரணம் அண்ணாமலையை முதல் அரசியல் எதிரியாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதனால் ஏதாவது ஒரு கூட்டணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்கிறது.

தேமுதிக கூட்டணி: சசிகலாவை நேரில் சென்று பார்த்தார்கள் என்பதற்காகவே கடந்த 2021 இல் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காத அதிமுக இன்று அதே தேமுதிகவை சந்திக்கிறது என்றால் அது எடப்பாடிக்கு வீழ்ச்சிதான். எப்படியாவது ஒரு அணியை உருவாக்கி 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும். அந்த கண்ணோட்டத்தில் எடப்பாடி நகர முயற்சிக்கிறார்.

40 தொகுதிகளில் 25: இந்த ஆண்டு அதிர்ச்சியை பலருக்கு கொடுக்கும். அதில் எடப்பாடிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. 40 தொகுதிகளில் 25 தொகுதிகளை அதிமுக வைத்துக் கொண்டு மீதமுள்ள 15 தொகுதிகளை கூட்டணிக்கு கொடுக்கலாம் என எடப்பாடி திட்டமிட்டுள்ளார். இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+