Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive ஈரோடு பக்கமே வந்துடாதீங்க.. அண்ணாமலையிடம் சொன்னாரா எடப்பாடி பழனிசாமி? நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்திற்கு அண்ணாமலையை வரவேண்டாம் என எடப்பாடி சொன்னதாக முன்னாள் ஆர்எஸ்எஸ் நிர்வாகி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நீங்கள் வந்தால் நாங்கள் டெபாசிட் வாங்க மாட்டோம். எனவே பிரச்சாரத்திற்கு வர வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார் என முன்னாள் ஆர்.எஸ்.எஸ். சத்ய பிரபு தெரிவித்துள்ளார்.

பாஜகவிலிருந்து விலகி நிறைய நிர்வாகிகள் அதிமுகவில் இணைகிறார்கள். மற்ற கட்சிகளுக்கு செல்லாமல் அதிமுகவுக்கு செல்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சத்யபிரபு ஒன் இந்தியா அரசியல் தளத்திற்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம் இதோ:

 அதிமுகவில் இணைவது ஏன்

அதிமுகவில் இணைவது ஏன்

கேள்வி: பாஜகவிலிருந்து விலகும் நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் போது அண்ணாமலை குறித்து முக்கிய புகார்களை வைக்கிறார்கள். அதிலும் அண்ணாமலை வார்ரூமை வைத்து வேவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வருகின்றன. இந்த வார் ரூம்கள் எப்போது முதல் இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்

பதில்: வார் ரூம் என்பது ஒன்றுமில்லை. நம் மாநிலத்தில் உள்ள ஜவுளி கடைகள், பெரிய பெரிய கட்டடங்களில் விதிமீறல்கள் நிச்சயம் இருக்கும். அந்த விதிமீறல்களை ஆர்டிஐ மூலம் தெரிந்து கொண்டு அந்த கம்பெனியில் பேரம் பேசுவது, இந்த டீலிங் பேக்கேஜாக இருக்கிறது. மாதத்திற்கு இவ்வளவு, வருடத்திற்கு இவ்வளவு, இல்லாவிட்டால் கட்சி கூட்டங்கள் போடும் மட்டும் பணம் வேண்டும் என்று கேட்பதும் உண்டு. இதற்கு அந்த நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், நாங்கள்தான் டெல்லியில் இருக்கிறோம். சிபிஐ ரெய்டு விடுவோம் என அச்சுறுத்தி பணத்தை வாங்குவது.

 ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள்

ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள்

ஆரம்பத்தில் தான் கட்சிக்கு வந்த போது தனக்கு தொல்லைகளை கொடுத்தவர்களை அண்ணாமலை பாஜக தலைவராக வந்தவுடன் அவர்களை ஓரங்கட்டினார். தன்னை எதிர்க்கும் நபர்களை நேரடியாக மோதாமல், அந்த நபர்களின் அந்தரங்க விஷயங்கள், தனிப்பட்ட விவகாரங்களை வைத்து அவர்களை மிரட்டுவதும் இந்த வார் ரூமின் பணியாகும். போலி பெயர்கள் ட்விட்டர் கணக்குகள், பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி தமிழக இளைஞர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்குவது.

கேள்வி: வேவு பார்ப்பதற்கு ஆர்எஸ்எஸ்ஸில் பயிற்சி ஏதேனும் அளிக்கப்படுமா?

பதில் : ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழு முதற் வேலையே வேவுபார்ப்பதுதான். பாஜகவில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு யாருடன் தொடர்பு, எந்த மதத்தை சேர்ந்தவர்களுடன் பழகுகிறார்கள், அவர்களின் தொழிலில் வரும் வருமானம் என்ன உள்ளிட்டவற்றை வேவு பார்ப்பதுதான் முழு வேலை. கட்சியில் நல்ல இடத்திற்கு போக வேண்டும் என்றால் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்களை கையில் வைத்துக் கொண்டு நல்ல பெயர் வாங்கி பதவி உயர்வை எட்டுவார்கள்.

 நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன பிரச்சினை

நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன பிரச்சினை

கேள்வி: சிடிஆர் நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன பிரச்சினை? அவர் எதற்காக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார்?

பதில்: அண்ணாமலை மீது பழி சொல்லும் சிடிஆர் நிர்மல் குமார் ஒன்றும் நல்லவர் இல்லை. தமிழகத்தில் சென்சிடிவ்வான விஷயங்களை கையில் எடுத்து மக்கள் மத்தியில் அண்ணாமலை எப்படி பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினாரோ அதே வேலையைத்தான் சிடிஆர் நிர்மல் குமாரும் செய்து வந்தார். உண்மைக்கு புறம்பாக வன்மத்தை மட்டுமே பரப்பக் கூடியவர்தான் நிர்மல்குமார். அவர் கட்சி பிடிக்கவில்லை, கட்சியின் கொள்கையும் சித்தாந்தமும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு வெளியே வரவில்லை. அவர் அண்ணாமலை பிடிக்கவில்லை என கூறிவிட்டு வெளியே வந்துள்ளார்.

10 லட்சம் அளவுக்கு ட்வீட் போடும் கட்டமைப்பை நிர்மல் குமார் உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அழைத்து பாராட்டியுள்ளனர். இதையெல்லாம் விட அண்ணாமலையின் குருவான பிஎஸ் சந்தோஷ், இந்த நிர்மல் குமாரை டெல்லிக்கு அழைத்து ஒரு ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து 45 நிமிடங்கள் காபி குடித்து கொண்டே பேசியுள்ளார்கள். இது அண்ணாமலைக்கு பிடிக்காமல் போய்விட்டது. நம்மை விட நிர்மல் குமார் பெரிய ஆளாக வந்துவிடுவாரோ என்ற பயம் அண்ணாமலைக்கு ஏற்பட்டது.

 ராகவனையே காலி செய்த அண்ணாமலை

ராகவனையே காலி செய்த அண்ணாமலை

ஏற்கெனவே டெல்லியில் லாபி செய்த கே.டி.ராகவனையே ஒன்னும் இல்லாமல் செய்துவிட்டோம். நிர்மல் குமார் எப்படி லாபி செய்யலாம் என அண்ணாமலைக்கு கோபம் ஏற்படுகிறது. இதனால் நிர்மல் குமாருக்கு மனரீதியாக உளவியல் ரீதியாக அண்ணாமலை பிரச்சினையை கொடுத்தார். ஐடி விங் தொடர்பான கூட்டங்களை இப்போது நடத்த வேண்டாம் என நிர்மல் குமாரிடம் சொல்லிவிட்டு, பின்னர் ஏன் இன்னும் கூட்டங்களை நடத்தாமல் இருக்கிறீர்கள் என 4 பேருக்கு முன்பு நிர்மல் குமாரை கேவலப்படுத்தியது, டெல்லியில் போட்டு கொடுப்பது போன்ற தொல்லைகளை கொடுத்தார் அண்ணாமலை.

ஜேபி நட்டா தமிழகத்திற்கு வந்த போது அண்ணாமலைக்கு தெரியாமல் ஒரு விவகாரத்தில் சிக்கிய நிர்மல்குமார் பின்னர் அண்ணாமலைக்கு தெரிந்து அவர் கண்டித்த பிறகு வெளியே வந்துவிட்டார். இதுதான் நடந்தது. அமர் பிரசாத் ரெட்டி அண்ணாமலையுடன் இருந்தாலும் அவர் செய்யும் அனைத்து வேலைகளையும் ரெட்டிக்கு தெரியும்.

 அண்ணாமலை- அமர் பிரசாத் ரெட்டி

அண்ணாமலை- அமர் பிரசாத் ரெட்டி

அண்ணாமலை குறித்து ரெட்டி அவதூறாக பேசியது அவருக்கு தெரியவந்து ரெட்டியை மிரட்டினார். உடனே ரெட்டியும் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். ஒரு வேலை ரெட்டியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால் அண்ணாமலை இது வரை செய்த தில்லுமுல்லு வேலைகளை ரெட்டி வெளியிட்டுவிடுவார் என்ற பயம் அண்ணாமலைக்கு இருக்கிறது. மற்றவர்களை போல் எனக்கு குடைச்சல் கொடுத்தால் நான் கட்சியிலிருந்து வெளியே போய் உண்மைகளை போட்டு உடைப்பேன் என்பதுதான் அமர் பிரசாத் ரெட்டியின் மிரட்டல். எனவே அமர் பிரசாத் ரெட்டியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா என்பதை ஜே பி நட்டாவின் நிகழ்ச்சி முடிந்த பிறகு எடுக்கப்படும் முடிவில்தான் தெரியும்.

 திருச்சி சூர்யா சிவா

திருச்சி சூர்யா சிவா

கேள்வி: திருச்சி சூர்யாவும் காயத்ரி ரகுராமும் இதுவரை எந்த கட்சியிலும் இணையாதது ஏன்? மற்றவர்கள் அதிமுகவில் இணைவது ஏன்

பதில்: அண்ணாமலைக்கும் சூர்யாவுக்கும் ஜாஸ்தி . இருவரும் தினமும் போனில் பேசிக் கொள்வார்கள். நிர்மல் குமார் குறித்து திருச்சி சூர்யா பேசும் அனைத்து வார்த்தைகளுமே அண்ணாமலை சொல்லி பேச வைப்பதுதான். நிர்மல் குமார் உள்ளிட்டோரை திமுகவில் இணைத்தால் அந்த கட்சிக்கு அவப்பெயர் என அவர்கள் சேர்க்க மாட்டார்கள்.

 அண்ணாமலை வர வேண்டாம் என சொன்ன இபிஎஸ்

அண்ணாமலை வர வேண்டாம் என சொன்ன இபிஎஸ்

அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமே மோதல் பிரச்சினை இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி பக்கமே வந்துவிடாதீர்கள் என அண்ணாமலைகிட்ட எடப்பாடி பழனிசாமி சொல்லிட்டாரு, நீங்கள் வந்தால் என்னால் எங்கள் கட்சி டெபாசிட்டையே இழந்துவிடும் என தெரிவித்தார். ஆனால் அதையும் மீறி சொந்த கட்சிக்காரர்கள் என்ன நினைப்பார்கள் என கருதியே அண்ணாமலை ஒரு மணி நேரம் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்தார்.

என்னிடம் ஈகோ பார்த்து கொண்டு எனக்கு குடைச்சல் கொடுத்தால் உங்கள் கட்சியினரை வைத்தே உங்கள் கண்ணை குத்திவிடுவேன் என அண்ணாமலைக்கு எடப்பாடி சொல்லாமல் சொன்னதுதான் நிறைய பேர் கட்சியை விட்டு போய் அதிமுகவில் இணைவது!

கேள்வி: ஒவ்வொரு வினைக்கு ஒரு எதிர்வினை உண்டு என அண்ணாமலை கூறுவது எதனை?

பதில்: என் கட்சியினரை உங்கள் கட்சியில் சேர்த்து என்னை அசிங்கப்படுத்தினால் உங்கள் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகளை அனுப்புவேன் என அதிமுகவுக்கு கொடுக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். மற்றபடி அண்ணாமலை சொல்வது போல் எந்த பெரிய தலைகளும் அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வரமாட்டார்கள். இவ்வாறு முன்னாள் ஆர் எஸ் எஸ் சத்யபிரபு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+