கருணாநிதிக்கு மெரினாவில் இடம்.. "அங்கதான்" எங்க மனசுல நின்னாரு எடப்பாடி பழனிசாமி.. மாஜி பெருமிதம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பல முறை முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அணி திரள்வது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஒன் இந்தியா தமிழ் அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம்:
கேள்வி: எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்திருக்கிறீர்கள். அது எப்படியிருக்கிறது?
பதில்: எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பல்வேறு இடைஞ்சல்கள், நீதிமன்ற வழக்குகளை தாண்டி எல்லோருடைய விருப்பப்படி அவர் அந்த பதவியில் வந்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வராக, இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த போது அவருடைய அணுகுமுறை எல்லோருக்கும் பிடித்தது. சாதாரண தொண்டன் கூட அவரை எளிதாக பார்க்க முடியும். கழகம் என வந்த போது உறுதியோடு நின்றதை பார்த்து அவர் அதிமுகவை நல்லபடியாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அந்த நம்பிக்கை வென்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதிமுக பிளவுப்படும்
கேள்வி: அதிமுக பிளவுப்படும் போதெல்லாம் மூத்த நிர்வாகிகள் எந்த அணிக்கு செல்வது என்பதில் குழப்பம் இருக்கும். எடப்பாடி பழனிசாமி அணியிலேயே இருக்க வேண்டும் என எது உங்களை இருக்க வைத்தது.
பதில்: எம்ஜிஆர் மறைந்த போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டதை எல்லாம் நான் நேரிடையாக பார்க்கவில்லை. நான் மாணவியாக இருந்தேன். ஆனால் எம்ஜிஆர் என்றால் இரட்டை இலை என்ற ஈர்ப்பு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த சம்பவங்களை எல்லாம் நேரிடையாக பார்த்தேன். ஓபிஎஸ் தர்மயுத்தத்தை நடத்தினாலும் கட்சி, இரட்டை இலை சின்னம், மெஜாரிட்டி யாரிடம் இருக்கிறது என்பதை பார்த்து அந்த இடத்தில் நிற்கக் கூடிய ஒரு மனநிலை இருந்தது.

எடப்பாடி முதல்வர்
எடப்பாடி முதல்வராக இருந்த போது ஏதாவது ஒரு கோரிக்கை வைத்தால் இது முடியும், முடியாது என பளீச்சென சொல்லிவிடுவார். ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்லை, கடைசி வரை நம்பிக்கை கொடுத்தபடியே கூறிவிட்டு முடியவில்லை என கைவிரித்துவிடுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் முடியும், முடியாது என முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார், இந்த பண்பு எடப்பாடியிடம் இருக்கிறது.

கருணாநிதி இறந்த போது
முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்கவில்லை என அதிமுக அரசு சொன்னது. அதை திமுக அரசு நீதிமன்றம் சென்று பெற்றது. ஆனால் அதிமுக அரசு நினைத்திருந்தால் அப்பீல் போயிருக்கலாம். ஆனால் போகவில்லை. இதை ஏன் என அவரிடம் கேட்ட போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது அங்கு சமாதி அமைக்கக் கூடாது என எத்தனை பேர் வழக்கு தொடர்ந்தார். இன்று ஜெயலலிதாவுக்கு எதிராக போட்ட பொது நல வழக்குகளையும் வாபஸ் பெற்றுவிட்டார்கள். எனவே இது நமக்கு கிடைத்த வெற்றி. நாம் பெருந்தன்மையுடன் இருக்கலாம், அவரும் (கருணாநிதி) ஒரு கட்சியில் தலைவராக இருந்தவர், அதனால் நான் அப்பீல் போகலை என கூறினார். ஆனால் திமுக எப்போதுமே எதிரிதான் என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி உறுதியாக இருந்தார்.

அமைச்சரவை
கேள்வி: ஜெயலலிதா அமைச்சரவையில் ஓபிஎஸ், எடப்பாடி என எல்லாருமே அமைச்சராக இருந்தவர்கள். ஒரு எளிமையானவர், தீர்க்கமாக முடிவு எடுப்பர் ஆகிய இரண்டும் எடப்பாடிக்கு போதுமா
பதில்: முதல்வராக எடப்பாடி இருந்த போது அவரது ஆட்சிக்கு எதிராக மக்களோ அதிகாரிகளோ இருந்ததில்லை. கிளைக் கழக செயலாளர் முதல் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு போதும் அணி மாறாமல் இருந்துள்ளார். சிவகங்கையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு சென்ற போது ஜாதி மத பேதமின்றி மக்கள் அவரை வரவேற்றார்கள். எனவே மக்கள் ஏற்றுக் கொண்டது அவருடைய தலைமை பண்பிறக்காகத்தானே!

பொதுக் குழு வழக்கு
கேள்வி: அதிமுக பொதுக் குழு வழக்கு முடிந்துவிட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா
பதில்: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுவிட்டார். அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் பணியும் நடக்க போகிறது. மேலும் வழக்கு போட்டால் தீர்ப்பு என்ன வரும் என்ன வரும் என்ற எதிர்பார்ப்பு ஜூன் 23 ஆம் தேதி அன்றைய தினம்தான் நிர்வாகிகள் கொந்தளித்துவிட்டனர். எனவே இனி ஓபிஎஸ் எத்தனை வழக்கு போட்டாலும் அதை தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இந்த பணிகள் முடிந்தவுடன் அடுத்தது நாடாளுமன்றத் தேர்தலுக்காக பூத் அமைக்கும் பணி என தலைமை முதல் அடிமட்ட தொண்டர் வரை இனி பிஸியாகிவிடுவார்கள்.
ஓபிஎஸ் சறுக்கியது எங்கே?
கேள்வி: ஓபிஎஸ்ஸை கட்சி வெளியேற்றியதா அவராக வெளியேறினாரா
பதில் : இந்த இரண்டையும் விட கட்சி அவருக்கு கொடுத்த வாய்ப்புகளை தவறவிட்டதால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றியில் கவனம் செலுத்தவில்லை. மாறாக அவருடைய மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்தினார். சரி அப்போது சில தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலாவது கவனம் செலுத்தினாரா என்றால் அதுவும் இல்லை. எனவே ஓபிஎஸ் கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டுவிட்டார் என்றுதான் நான் சொல்வேன். யாரையும் வெற்றி பெறவைக்கவில்லை. வெற்றி பெற வைக்காததால்தான் அவருக்கு இந்த நிலை என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications