பூமியில் ஒரு பகுதியே.. கருப்பாக மாறிய நொடி! சூரிய கிரகணத்தில் நடந்தது என்ன? மஸ்க் வெளியிட்ட காட்சி
சென்னை: நேற்று அமெரிக்காவில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் போது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை பகிர்ந்துள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க். அமெரிக்கர்கள் பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் நேற்று நடந்தது . சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து சென்று சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்கும் போது, அது பூமியில் ஒரு நிழலை ஏற்படுத்துகிறது. பூமியின் அந்த பகுதியில் இருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

நேற்று ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் வானத்தை அலங்கரித்து, பகலை இரவாக மாற்றும் வகையில், வானியல் பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் நடந்தது.
இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும் இந்தியாவிலும் இதன் மறைமுக தாக்கங்கள் இருந்தது. சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பலருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த முறை அமெரிக்கர்களுக்கு அதை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
2024ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. ஜோதிடத்தில் இது 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அபூர்வமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா இடையே 185 கிலோமீட்டர் நீளமுள்ள 185 கிலோமீட்டர் நீளம் முழுவதும் வானம் இருளில் தெரிந்தது. 18 வெவ்வேறு அமெரிக்க மாநிலங்களில் இருந்து இதைப் பார்க்க முடிந்தது . இருப்பினும், இந்தியாவில் உள்ள வான கண்காணிப்பாளர்களுக்கு இது கண்களில் புலப்படவில்லை.
Mesmerized by the breathtaking eclipse. Nature’s celestial dance paints the sky with awe-inspiring hues, reminding us of the sheer beauty and power of the natural world.
— Sriram (@SriramMadras) April 8, 2024
Shot on Nikon Z9, 180MM ED lens pic.twitter.com/KfKalcj7Ks
இந்திய நேரப்படி (IST), முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 அன்று இரவு 9:12 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 9, 2024 அன்று அதிகாலை 2:22 மணிக்கு முடிந்தது. மெக்ஸிகோவின் பசிபிக் கடற்கரையானது முதன்முதலில் 11:07 amக்கு சூரிய கிரகணத்தை அனுபவித்தது.
நேற்று அமெரிக்காவில் தென்பட்ட சூரிய கிரகணத்தின் போது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை பகிர்ந்துள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க். அமெரிக்கர்கள் பலர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
View of the eclipse from orbit
— Elon Musk (@elonmusk) April 9, 2024
pic.twitter.com/2jQGNhPf2v
என்ன காரணம்: இந்த சூரிய கிரகணம் ஏற்படும் போது பலருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்படுவது வழக்கம். இதற்கு பின் 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஜோதிட ரீதியாக, சூரியன், சந்திரன் ஒரு கோட்டில் வரும் நிகழ்வில் ஒவ்வொரு ராசிகளின் சந்திர, சூரியன் அமைப்பை பொறுத்து அவர்களின் உடல் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆற்றல் மாற்றங்கள் பாதிப்படையும். இதன் காரணமாக உடலில் திடீரென மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தலைவலி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
So wait wait, hundreds of people captured images of Solar Flares on their camera phones during the eclipse….
— Concerned Citizen (@BGatesIsaPyscho) April 8, 2024
The Sun is 91,000,000 miles away & you expect me to believe that an iPhone/Samsung can record a Solar Flare 91 million fucking miles away?
Give me a Godamn break. pic.twitter.com/8vGFyDluPE
அறிவியல் ரீதியாக , சூரியன், சந்திரன் ஒரு கோட்டில் வரும் நிகழ்வில் திடீரென வானிலை மாற்றம் ஏற்படும், வெப்பம் குறையும். திடீரென வானம் இருட்டும். இந்த திடீர் வானிலை மாற்றம் பலருக்கும் வயிற்று பிரச்னையை உருவாக்கி அதனால் தலைவலியும் ஏற்படும். திடீரென வெயில் காலத்தில் பிற்பகலில் மழை பெய்தால் சிலருக்கு தலை வலிக்குமே அப்படிதான் இதுவும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications