சரண்டர் ஆகிட்டாரே.. பேச்சை கவனிச்சீங்களா? ‘சவுத் அதிருது’.. ஓபிஎஸ் மாஸாம்.. சொல்றது யார்னு பாருங்க!
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கான ரிசல்ட் 2024ல் கிடைக்கும் எனக் கூறியுள்ளார் ரவீந்திரன் துரைசாமி.
சென்னை : அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், ஈபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்ஸுக்கு எந்த செல்வாக்கும் இல்லை எனக் கூறி வரும் கருத்துகள் பற்றி பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என ஈபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர்.
ஈபிஎஸ் தரப்பினரின் இந்த வாதங்களை மறுக்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

சரண்டர் ஆன எடப்பாடி
கேள்வி : எடப்பாடி பழனிசாமி ஒரு சமூக ஆதரவு பெற்றவர், ஒரு சாதி ஆதிக்கத்தையே நிலைநாட்டுகிறார் என விமர்சிக்கப்படுகிறது. ஈபிஎஸ் மதுரையில் பேசும்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன் என்று பேசுகிறார். எல்லோரையும் அரவணைக்கத்தானே முயற்சிக்கிறார்..?
ரவீந்திரன் துரைசாமி : எதற்கு எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகவேண்டும்? தியாகி இமானுவேல் சேகரனா, முத்துராமலிங்கத் தேவரா என்ற விஷயத்தில் ஜெயலலிதாவே எந்தப் பக்கமும் சார்பாக முடிவெடுக்கவில்லை. ஆனால், ஈபிஎஸ் ஏன் ஒரு பக்கம் சரண்டர் ஆகவேண்டும்? முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறார். ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்காமல், சி.வி.சண்முகத்தின் பவர் பாலிடிக்ஸால் அவரிடம் சரண்டர் ஆனார் ஈபிஎஸ். இதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 2024ல் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கான ரிசல்ட் கிடைக்கும்.

மாஸ் லீடர்
கேள்வி : எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்தியாளர் சந்திப்பின்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை, அவரால் இனி ஒன்றுமே செய்ய முடியாது என மிகுந்த நம்பிக்கையாகப் பேசுகிறார்களே..
ரவீந்திரன் துரைசாமி : ஓ.பன்னீர்செல்வமும் இன்று ஸ்ட்ராங்காகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் அனுபவம் வாய்ந்த தலைவர். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் அவருக்குத் தெரியும். ஆனால், பெருந்தன்மையாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார். அமைதியாக சிந்தித்து செயல்படக் கூடியவர் ஓபிஎஸ். நான் ஓபிஎஸ்ஸை சந்திக்கும்போதே சொன்னேன், நீங்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இப்போதைக்கு நீங்கள் தான் மாஸ் லீடர் என்று சொன்னேன். எடப்பாடி பழனிசாமி 2024ல் 15% க்கான தலைவராகத்தான் நிற்பார் என்பது எனது கணிப்பு.

2 மடங்கு ஓட்டு
கேள்வி : சசிகலா, தினகரனையே ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை எளிதாக ஓரங்கட்டி விடுவார் இல்லையா?
ரவீந்திரன் துரைசாமி : சசிகலா, வாக்கு வலிமையை நிரூபித்தவர் அல்ல. தினகரனை ஓரங்கட்டியதில் பன்னீர்செல்வத்தின் உதவியும் இருந்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்துதான் தினகரனை ஓரங்கட்டினார்கள். இப்போது தோற்றுப் போயிருக்கும் ஈபிஎஸ்ஸுக்கு, ஓபிஎஸ்ஸுக்கும் என்ன செல்வாக்கு என்பதைத்தான் பார்க்க வேண்டும். மக்கள் மன்றத்திற்குள் போகும் இந்த ஃபைட்டை 2024 தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும். ஈபிஎஸ் தரப்பு நினைப்பது போல தேர்தல் ஆணைய வெப்சைட்டில் ஏறாது. சின்னம் முடங்கவும் வாய்ப்புள்ளது. சின்னம் முடங்கினால் ஓபிஎஸ் அதிக வாக்குகளை எடுப்பார். டிடிவி தினகரனை விட 2 மடங்கு ஓட்டுகள் அதிகம் எடுப்பார். எல்லோர் வைக்கும் கணிப்புக்கும் 2024ல் தான் ரிசல்ட் தெரியும்.

இந்த ரிசல்ட் கணக்கே இல்லை
கேள்வி : இனிமேல் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்றெல்லாம் இல்லை, அதிமுக ஒன்றுதான், அது நாங்கள் தான் என்கிறார்களே எடப்பாடி தரப்பினர்..
ரவீந்திரன் துரைசாமி : ஓபிஎஸ்ஸுக்கு எவ்வளவு ஓட்டு, ஈபிஎஸ்ஸுக்கு எவ்வளவு சதவீத ஓட்டு என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். திண்டுக்கலில் எம்ஜிஆர் ஜெயித்தார். அதே தேர்தல் சென்னையிலோ, தஞ்சையிலோ நடந்திருந்தால் மூன்றாவது இடம் கூட போயிருப்பார். பெருந்துறையில் வைகோ இரண்டாம் இடம் வந்தார். அதுபோல, எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் நான்கைந்து தொகுதிகள் தான் இருக்கும். அதனால், ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் ரிசல்ட்டெல்லாம் கணக்கே இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு அளவில் என்ன செல்வாக்கு என்பதைப் பார்ப்போம்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications