அமெரிக்காவிற்கு வந்துடுங்க சிவாஜி.. பிடிஆருக்கு போன பரபரப்பு ஆபர்.. அப்படி ஒரு முடிவை எடுக்கிறாரா?
சென்னை: மீண்டும் அமெரிக்காவிற்கே வந்துவிடுங்க சிவாஜி.. என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அவருக்கு நெருக்கமான சில நலம் விரும்பிகள் கோரிக்கை வைத்து வருகின்றனராம்.
நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து தகவல் தொழில் நுட்பத்துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறையையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமளவில் சரி செய்தார். சமீபத்தில் பட்ஜெட் உரையில் கூட, திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் காரணமாக தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது.

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2 வருட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருவாய் சீர்திருத்தங்கள்தான். முக்கியமாக வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம்.
கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாற்றத்தை செய்து இருக்கிறோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் நிதி அமைச்சரவை பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.
ஆடியோ: சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சர் மாற்றம்: இந்த நிலையில்தான் ஐடி துறைக்கு அமைச்சர் பிடிஆர் மாற்றப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஐடி துறை அமைச்சர் பிடிஆருக்கு பிடித்தமான துறை தான் என்றாலும், அதில் அவ்வளவாக விருப்பம் காட்டாமலே இருந்து வருகிறாராம் அவர். துறையில் என்ன நடக்கிறது ? எந்த மாதிரி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது ? எந்தெந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன குறித்தெல்லாம் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறார்.
இலாகா மாற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டாலும் அந்த மாற்றம் தனது தகுதிக்கு குறைவானதாக அவர் ஃபீல் பண்ணுகிறாராம். மேலும், மதுரை மாவட்ட அரசியலிலும் அவருக்கு நெருக்கடி இருப்பதால் சமீபகாலமாகவே அப் செட்டாகத்தான் இருந்து வருகிறார் பி.டி.ஆர். ! இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள அவருக்கு நெருக்கமான பலர் அவரை மீண்டும் அழைக்கிறார்களாம். அமெரிக்காவிற்கே வந்துவிடுங்கள். இங்கே பெரிய ஆபர்கள் இருக்கின்றன.
அங்கே நல்ல பொறுப்புகளில் இருக்கலாம். அமைச்சரவை பொறுப்பிலிருந்து விலகி விடுங்கள் ; அமெரிக்காவில் செட்டில் ஆகலாம். அமெரிக்க நிறுவனங்கள் தான் உங்களை மீண்டும் அழைகின்றனவே.
அதில் உங்களின் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுங்கள் என்று பி.டி.ஆர். குடும்பத்தினரும் அவரது அமெரிக்க வாழ் நண்பர்களும் வலியுறுத்தி வருகிறார்களாம். என்ன முடிவு எடுப்பது ? என யோசித்தபடி இருகிறாராம் பி.டி.ஆர்.
ஐடி அமைச்சர் பிடிஆர் : சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக ஐடி துறை அமைச்சர் பிடிஆர் கூகுள் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் செய்துள்ள போஸ்டில், ருச்சிதா அகர்வால் மற்றும் அவரது குழுவினருடன் சிறப்பான சந்திப்பு நடைபெற்றது. 2019 & 2021 பிரச்சாரங்களில் (திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளராக) அவர்களின் மிகப்பெரிய விளம்பரதாரர்களில் ஒருவராக நான் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன்.
எனது புதிய அமைச்சரவை பதவியில் அவர்கள் என்னைச் செயலகத்தில் சந்தித்து, நாம் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை ஆராயுமாறு அழைத்தனர். தமிழ்நாட்டின் சிறந்த டிஜிட்டல் புரட்சியை அங்கீகரித்து, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மாற்றுவதற்கான எங்கள் பார்வையை மையமாக வைத்து இந்த மீட்டிங் அமைந்தது.
கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நாம் வேகமாக முன்னேற முடியும். புதுமைகளை வளர்ப்பதன் மூலமும், செழிப்பான வணிக சூழலை உருவாக்குவதன் மூலமும், அதை மிகவும் விருப்பமான தகவல் தொழில்நுட்ப முதலீட்டு இடமாக உயர்த்துவதன் மூலமும் தமிழ்நாட்டை முன்னுக்கு கொண்டு வர முடியும் என்று அமைச்சர் பிடிஆர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கூகுள் போன்ற நிறுவனத்தை கொண்டு வர வேண்டும் என்பது பல கால கனவு. அது தற்போது நிறைவேறுவதற்கான சாத்திய கூறுகள் தெரிய தொடங்கி உள்ளன. தெற்கு ஆசியாவில் சீனாவிற்கு பதிலாக இந்தியா பக்கம் பார்வையை திருப்பும் கூகுளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் எதிர்காலம் மொத்தமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
-
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications