செந்தில் பாலாஜிக்கு மின்சார துறை கொடுப்பதாகவே இல்லையாமே! அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறாரா?
சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மின்சாரத் துறை, மது ஆயத்தீர்வைத் துறை செந்தில் பாலாஜிக்கு கொடுப்பதாக இல்லை என மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியல் களத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏன் எதிர்க்கட்சிகள் குறி வைக்கிறார் என கேட்டீர்களேயானால் அதற்கு இரு காரணங்கள் உள்ளன.

அதாவது ஒன்று அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை தோற்கடிக்க வைத்தது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக பலமாக உள்ள சென்னையை விட பலகீனமாக உள்ள கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற வைத்தது அந்த மண்டலத்தின் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.
இரண்டாவது காரணம்- அதிமுகவில் ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமியுடன் உரசல் இருந்து வந்தது. எனவே செந்தில் பாலாஜியை வீழ்த்துவதற்கு அதிமுகவும் பாஜகவும தயாராக இருக்கிறது. இதனிடையே செந்தில் பாலாஜியின் வளர்ச்சி என்பது எல்லோராலும் ஏற்க முடியாத ஒன்று. திமுகவிலேயே சீனியர் அமைச்சர்களால் செந்தில் பாலாஜியின் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை. இத்தனை காரணிகள் செந்தில் பாலாஜி மீது இருக்கும்போது எதிர்ப்பு என்பது இயல்புதான்.
டாஸ்மாக் தொடங்கப்பட்ட காலம் முதலே 1 ரூ, 2 ரூ, 5 ரூ என அதிகம் விற்று வருகிறார்கள். தற்போது ரூ 10 கூடுதலாக விற்கிறார்கள். அதற்கு செந்தில் பாலாஜி மட்டுமே காரணம் என சொல்ல முடியாது. மதுபானங்கள் உற்பத்தி செய்யும் மையத்திலிருந்து கடைகளுக்கு நேரடியாக மதுபானங்களை கொண்டு செல்ல முடியாது. அப்படி செய்தால் அதில் கள்ளச்சாராயம் ஏதேனும் கலந்து விற்று ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த உரிமையாளர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

ஏன் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் வருகிறது என்றால் 24 மணி நேரமும் பார்கள் திறக்கப்படுகின்றன. மதுபானங்கள் விற்கப்படுகின்றன, ரூ 10 கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதே குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் இல்லை என சொல்ல முடியாது. எல்லா ஆட்சியிலும் டாஸ்மாக் இப்படித்தான் இருந்துள்ளது.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு ஏன் எதிர்ப்பு என்றால் முதலில் பாஜக எதிர்ப்பு, அதிமுக எதிர்ப்பு,சொந்த கட்சியும் அவருக்கு எதிர்ப்பு. காரணம் 1995 ஆம் ஆண்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக, அமமுக , திமுக ஆகிய கட்சிகளுக்கு சென்றுள்ளார். அவர் மதிமுகவிலும் இருந்துள்ளார் என கூறுகிறார்கள்.
அதிமுகவில் சேர்ந்ததும் தலைமைக்கு நம்பிக்கைக்குரியவராகிவிட்டார், போக்குவரத்துத் துறை அமைச்சரானார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். அதன் பின்னர் அரவக்குறிச்சி தேர்தல் நடந்து எம்எல்ஏவானார். ஆனால் அவரால் அமைச்சராக முடியவில்லை. அதற்குள் ஜெயலலிதா தவறிவிட்டார்.

பின்னர் அமமுகவிலும் தினகரனுக்கு நெருக்கமானார். தற்போது திமுகவிலும் தலைமைக்கு நெருக்கமாகிவிட்டார். வலிமையான துறையின் அமைச்சராகவும் இருக்கிறார். 2018 இல் திமுகவில் சேர்ந்தாலும் 5 ஆண்டுகளில் திமுகவின் முன்னணி தலைவர்களே வருத்தப்படும் அளவுக்கு மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை எனும் இரு வலிமையான துறைகளை கையில் வைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பாஜக இரு இடங்களில் போட்டியிடும். அப்போது பாஜகவையும் அதிமுகவையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும். எந்த கட்சியாக இருந்தாலும் தலைமையுடன் நெருக்கமாக இருக்கக் கூடாது. சற்று விலகியே இருக்க வேண்டும். தலைமையுடன் நெருக்கமாக இருந்தால் மற்றவர்களுக்கு சும்மா விடுவார்களா? பிடிஆர் மீது ஆடியோ விவகாரம் வெளியானதும் அவரது இலாகா மாற்றப்பட்டதை போல் முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் துறையை மாற்றுவாரா இல்லை அவரை பணியிலிருந்து நீக்குவாரா என்பது தெரியவில்லை.
அதிமுகவில் கூட தங்கமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் போட்டி அரசியல் இருந்தது. தங்கமணி எம்.ஆர்.விஜயபாஸ்கரை வளர்க்க நினைத்தார். திமுக ஆட்சிக்கு வந்த போது செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை கொடுக்கப்படுவதாக இல்லை. அந்த துறை தங்கம் தென்னரசுவுக்கு போவதாக இருந்தது. ஆரம்பத்திலேயே தொழில் துறை டி.ஆர்.பி ராஜாவுக்கு போவதாக இருந்தது. ஆனால் தங்கமணி வைத்திருந்த மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைதான் தனக்கு வேண்டும் என கேட்டு வாங்கினார் செந்தில் பாலாஜி.
அதனால்தான் தொழில் துறை தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டது. டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. செந்தில் பாலாஜி புதிதுபுதிதாக யோசித்து செயல்படுகிற வேகம்தான் அவருக்கு சிக்கலாக இருக்கிறது. வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கில் முதலில் பணம் வாங்கவில்லை என்றார், பிறகு அதிமுகவில் யூனியனில் உள்ள ஒருவர் வாங்கியதாக தெரிவித்தார். எனினும் ஏமாந்தவர்களுக்கு ரூ 4 கோடி வரை பணத்தை செந்தில் பாலாஜி திருப்பி கொடுத்தார். திருப்பி கொடுத்தாலும் அந்த பணம் எங்கிருந்து வந்தது என கேட்டு அமலாக்கத் துறை உள்ளே வருகிறது. எனவே இந்த வழக்கை அவ்வளவு எளிதாக முடிந்து விட அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் விடமாட்டார்கள். சிபிஐ விசாரணை கேட்பார்கள். அப்போது செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி ஏற்படும் என குபேந்திரன் தெரிவித்தார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்!












Click it and Unblock the Notifications