புதிய நாடாளுமன்ற திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு காரணமே வேற! சுமந்த் ராமன் சொல்றதை பாருங்க
சென்னை: புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காததற்கு காரணம் பிரதமர் மோடி தன்னை மட்டுமே முன்னிறுத்த விரும்புகிறார் என அரசியல் ஆலோசகர் சுமந்த் சி ராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ரூ 2000 நோட்டுகள் என்ன காரணத்திற்காக திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது என தெரியவில்லை. ஒரு காலத்தில் இந்த நோட்டுகளின் புழக்கம் 37 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 11 சதவீதமாக குறைந்துவிட்டது.

2019- 2020 ஆம் ஆண்டுகளில் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை. தற்போது இருக்கும் ரூ 2000 நோட்டுகள் எல்லாமே 3 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கப்பட்டது. புதிதாக ரூ 500, ரூ 200, ரூ 100 என நோட்டுகள் புழக்கத்தில் வர வர தற்போது 11 சதவீதமாக இருக்கும் ரூ 2000 நோட்டுகள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நிச்சயம் குறைந்திருக்கும். அப்போது இந்த நோட்டுகளை திரும்ப பெற்றிருக்கலாமோ என்பது எனது கருத்து.
முதலில் உரிய ஆவணங்களுடன் வந்து ரூ 2000 நோட்டுகளை மாற்றலாம் என்றார்கள். தற்போது ஆவணங்கள் எல்லாம் வேண்டாம். வரிசையில் நின்று ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வீதம் மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள். எனவே இந்த ரூ 2000 நோட்டுகள் வாபஸ் என சொல்வதுதான் சரியாக இருக்கும். இதை பணமதிப்பிழப்பு என சொல்வது தவறு.

எல்லா இடங்களிலும் அந்த ரூ 2000 த்தை வாங்கினால்தான் அதை லீகல் டென்டர் எனலாம். ஆனால் பெட்ரோல் பங்க், கடைகளில் எல்லாம் இந்த நோட்டுகளை வாங்குவதில்லை. அப்படியிருக்கும் போது இதை எப்படி லீகல் டெண்டர் என சொல்ல முடியும். இதெல்லாம் யோசித்துதான் எடுக்கப்பட்ட முடிவுகளா என்ற சந்தேகம் இருக்கிறது.
குறிப்பாக ரூ 2000 வாபஸ் குறித்த அறிவிப்பின் போது கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை, எனவே ஆவணங்களுடன் வந்து வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என கூறியிருந்தனர். ஆனால் அடுத்த நாள் யார் வேண்டுமானாலும் வந்து மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள். அதனால் அரசின் இந்த நோக்கமும் புரியவில்லை. இது எதை சாதிக்கும் என்றும் தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பணப்புழக்கத்தில் ஈடுபடலாம் என்பதால் இந்த ரூ 2000 வாபஸ் பெறப்படுவதாக சொல்வது தவறு. ஏன் ஆளும் கட்சியினரிடம் பணம் இருக்காதா? ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ நாள்தோறும் பணத்தை வைத்து நடத்த முடியாது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க கொஞ்சம் பணம் வைத்திருக்கலாம். மற்றபடி அரசியல் கட்சிகள் எல்லாம் எந்நேரமும் பணமாக வைத்திருப்பார்கள் என கூறுவது தவறு.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, அதன் திறப்பு விழாக்களில் அப்போதிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இப்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் பட்டியலினத்தவர்கள் என்பதால் பிரதமர் மோடி அழைக்கவில்லை என நான் பார்க்கவில்லை. அவர்கள் வந்தால் மோடி மீதான கவனம் போய்விடும். அனைவரது பார்வையும் மோடி மீது மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம்.
ஆனால் குடியரசுத் தலைவர்களை அழைக்காதது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டின்படி தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும். அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான் எல்லோருடைய குற்றச்சாட்டாக உள்ளது. உள்கட்சி பிரச்சினைகள் ஓரளவுக்கு தீர்வு ஏற்பட்டு எடப்பாடியால் தற்போது செயல்பட முடிகிறது. அப்படியிருக்கும் போது கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்றது நல்லது.
ஆனால் போக்குவரத்தை தடை செய்து பேரணி செய்தது தவறு. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவது அவர்களுடைய கடமை. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. 23 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். அடுத்த நாளே இந்த இடத்தில் இத்தனை லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், அந்த இடத்தில் இத்தனை லிட்டர் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தனை நாளாக போலீஸார் என்ன செய்தார்கள். இந்த கள்ளச்சாராயம் காய்ச்சியதை ஏன் கண்டுபிடிக்கவில்லை. இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் போதுமான அளவு செயல்படவில்லை.
எதிர்க்கட்சியாக திமுக இருந்திருந்தால் இந்த கள்ளச்சாராய மரணத்தில் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்திருப்பார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய நினைவு நாளை திசை திருப்பவே அதிமுக பேரணி சென்றதாக கூறுவது தவறு. அருணா ஜெகதீசன் குழு அளித்த பரிந்துரையின் படி இதுவரை திமுக அரசு யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதுதான் எதிர்க்கட்சியாக இருந்தார்கள். இப்போது ஆளும் கட்சிதானே, சரியான நடவடிக்கையை அந்த போலீஸார் மீது எடுக்கணும் தானே. இவ்வாறு சுமந்த் சி ராமன் பேட்டி அளித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications