திமுக 168 இடங்கள் வரை ஜெயிக்கும்.. அதிமுகவுக்கு எவ்வளவு சீட்? இது Poll Diary வெளியிட்ட எக்சிட் போல்!
சென்னை: போல் டைரி (Poll diary) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, திமுக கூட்டணி 168 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 81 சீட்கள் வரை ஜெயிக்க வாய்ப்புள்ளதாக இந்த எக்சிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இதனிடையில் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருந்ததால், ஏற்கனவே தேர்தல் முடிந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலைமேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக கட்சிகள் இடையில் போட்டிகள் நிலவி வந்தது. குறிப்பாக திமுக, அதிமுக, தவெக கட்சிகள் மத்தியில் கடுமையான போட்டி இருந்ததாக சூழல் நிலவியது. இந்த தேர்தல் முடிவுகள் துல்லியமாக கணிக்கப்பட முடியாததாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள எக்சிட் போல் கணிப்புகள் பெரும்பாலானவற்றில் திமுக மீண்டு ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போல் டைரி (Poll diary) வெளியிட்ட எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 148 - 168 இடங்கள் வரை ஜெயிக்கக்கூடும் என போல் டைரி வெளியிட்ட எக்சிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 61 முதல் 81 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்றும் போல் டைரி நடத்திய எக்சிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 1 - 9 சீட்களில் வெல்லக்கூடும் என போல் டைரி எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை வெளியாகியுள்ள பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகளும், தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவித்துள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ், சாணக்யா, பி-மார்க் உள்ளிட்டவை நடத்திய எக்சிட் போல் கணிப்புகளில் சராசரியாக திமுக 127 - 141 இடங்களையும், அதிமுக 79 - 93 இடங்களையும் தவெக 10 - 16 இடங்களையும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை








Click it and Unblock the Notifications