எக்ஸிட் போல் முடிவுகள்.. செந்தில் பாலாஜியுடன் மீட்டிங் போட்ட ஸ்டாலின்.. அறிவாலயத்தில் நடந்தது என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையை நடத்தியுள்ளார். அமைச்சர் முத்துசாமி, பெரிய கருப்பன், சிவி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருடன் ஆலோசித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ல் நிறைவடைந்த நிலையில், பல்வேறு ஊடகங்கள் தங்களின் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த கணிப்புகள் திமுக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கடும் போட்டியை வெளிப்படுத்தியுள்ள சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக மண்டல வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் கட்சிக்கு உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் சி.வி. கணேசன், முத்துசாமி, பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களின் பங்கேற்பு அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, கொங்கு மண்டலத்தில் திமுகவின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர்.
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட முத்துசாமி, ஈரோடு மாவட்டங்களில் நிலவும் கள நிலவரம் குறித்து ஸ்டாலினிடம் விரிவாக கூறியுள்ளார்.
சி.வி. கணேசன் தரப்பில் வட மாவட்டங்களின் நிலவரம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதனை கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், சில அறிவுறுத்தல்களையும் கொடுத்துள்ளார்.
அதேபோல் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்று கேட்டு, அதற்கான பதிலை ஸ்டாலின் ஆர்வமுடன் கேட்டுள்ளார். இதன்பின் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது முழுமையான கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை திமுகவினர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று சென்னை திரும்பினார். தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், உடனடியாக அவசர ஆலோசனையை நிர்வாகிகளுடன் நடத்தி இருக்கிறார். இதனால் அறிவாலயம் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications