சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko PressMeet: 2 நாள்தானே இருக்கு.. முடிவுக்கு காத்திருப்போம் - வைகோ- வீடியோ

    சென்னை: தேர்தல் முடிவுகள் இன்னும் 2 நாட்களில் தெரிந்துவிடும் அதுவரை பொறுத்திருப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.

    ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவு முடிந்து சாட்சி விசாரணை தொடங்கவிருந்த நிலையில், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சாந்தி முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.

    காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையவே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.. விஜயதாரணி பேட்டி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையவே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.. விஜயதாரணி பேட்டி

    வைகோ ஆஜர்

    வைகோ ஆஜர்

    அப்போது அரசுத்தரப்பு சாட்சியான கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் மோகன் சார்பில் 12.30 மணிக்கு ஆஜராக அனுமதி கோரியதால் வழக்கு விசாரணை 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி அனுமதியுடன் வைகோ நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டார்.

    கருத்துக்கணிப்பு மாறும்

    கருத்துக்கணிப்பு மாறும்

    மீண்டும் விசாரணைக்காக அவர் வரும் மே.27ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஆஜராவார். நீதிமன்றத்தில் இருந்து புறப்படும் முன் செய்தியாளர்களை வைகோ சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல நேரங்களில் மாறுபட்டு இருக்கிறது. அதனால் இந்த கருத்துக் கணிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

     செய்தியாளர் சந்திப்பே கிடையாது

    செய்தியாளர் சந்திப்பே கிடையாது

    தேர்தல் முடிவுகளுக்காக இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மோடி செய்தியாளர்களை சந்தித்தது அவரது கதைகளில் ஒன்றுதான். அப்பொழுதும் அவர் அமித்ஷா பதிலளிப்பார் என்று தெரிவித்து விட்டார். இது செய்தியாளர் சந்திப்பே கிடையாது.

    உடனே நிறுத்த வேண்டும்

    உடனே நிறுத்த வேண்டும்

    200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான வேலையை வேதாந்தா நிறுவனம் துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. இதனை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

    English summary
    MDMK general secretary Vaiko has said wait for two days election results will be announced. Exit polls will change he said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X