உரிமைத் தொகையோ ஆயிரம்தான்!உண்மைக் கதைகளோ பல்லாயிரம்! மகிழும் காஞ்சி மகளிர்..!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவில் உள்ள அனைவரையும் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. இதனை அண்ணா பிறந்தநாளான அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் முதல்வரின் கையால், ஏடிஎம் அட்டையைப் பெற்றார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால், அட்டையைப் பெறுவதற்கு முதல் நாளே வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றுவிட்டார்கள் இந்த மக்கள். கைமேல் பலன் என்பார்கள். இவர்களோ பலனடைந்த பிறகு, விழாவிற்கு வந்திருந்தார்கள்.

அந்த அனுபவம் பற்றி கலைஞர் செய்திகள்தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல பெண்கள் பேசினார்கள். அதில் பங்கேற்றவர்கள், இந்த ஆயிரம் ரூபாய் குறித்த முக்கியத்துவத்தைப் பேசும் போது உணர்ச்சி வெள்ளத்தில் குரல் உடைந்துபோய்ப் பேசினர்.
சிலர், இந்த ஆயிரம் ரூபாய் என்ன செய்துவிடப்போகிறது என்று அரசியல் லாபத்திற்காகக் கருத்து கூறிவருகின்றனர். ஆனால், அதை எல்லாம் தாண்டி இந்த 1000 எவ்வளவு பெரிய தொகை என்பதைக் களத்தில் உள்ள இந்தப் பெண்கள் சாட்சியம் தந்துள்ளார்கள்.

"பலரும் என்ன பண்றீங்க? என்று கேட்பார்கள். நாம் ஹவுஸ் ஒய்ஃப் எனச் சொன்னால் வீட்டில் சும்மா தானே இருக்கிறார் என்ற மனநிலையோடு நம்மைப் பார்ப்பார்கள். ஆனால், நாங்கள் வீட்டில் சும்மா இல்லை. காலை தொடங்கி இரவு தூங்கப் போகும் வரை நாங்கள் குறைந்தது 18 மணிநேரம் வேலை பார்க்கிறோம்.
ஆபீசில் கூட 8 மணிநேரம்தான் வேலை. எங்களுக்கு எப்போதும் வேலை. ஆனால், எங்கள் கையில் பத்து காசு சொந்தமா இருக்காது. குடும்பத்திற்கு எங்கள் பங்களிப்பாக இப்போது அரசாங்கம் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது.

என் பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசையைக் கூட சரிசெய்து கொடுக்க முடியாமல் தவிப்பேன். இப்போது இந்த ஆயிரம் அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய உதவும். யார் உதவியையும் தேடாமல் என் கையில் மாதம் ஆயிரம் கிடைப்பது எவ்வளவு பெரிய விசயம்?" என்கிறார் ஒரு குடும்பத் தலைவி.
"நாங்கள் கூலி வேலைதான் செய்கிறோம். தினம் சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டப்படும் நிலைமைதான் இப்போது இருக்கிறது. நான் வீட்டில்தான் சமையல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். தினம் கூலி கிடைத்தால்தான் சாப்பாடு. இல்லை என்றால் அன்றைக்குப் பட்டினிதான்.

ஆனால், எனக்கு இப்போது ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. நாங்கள்தான் படிக்காமல் போய்விட்டோம். என் பிள்ளைகளையாவது நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என விரும்புகிறேன்.
மாதா மாதம் கிடைக்கும் இந்தப் பணத்தைச் சேர்த்துவைத்தால், அவர்களை நன்றாகப் படிக்கவைக்கலாம். பிள்ளைகள் கேட்கும் நோட்டுப் புத்தகங்களை வாங்கி தரலாம். இதை எல்லாம் நினைத்து ஆயிரம் ரூபாய் தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரைப் போல் வேறு யாரும் எங்கள் கஷ்டத்தை உணர்ந்ததே இல்லைகிறார் இந்தப் பாமர பெண்மணி வள்ளியம்மாள்.

இவர் பேசும் போது குரல் கட்டுகிறது. அடக்கமுடியாமல் கண்ணீர் வெடித்து வெளியேறுகிறது. இந்த மக்களின் கண்ணீர்தான் இந்தத் திட்டத்திற்கான தரச்சான்று.
அடுத்த பேச வந்தவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டையில் இருந்து வந்தவர். "மழைக்காலம் வந்துவிட்டால் எங்களால் தறி செய்ய முடியாது. சுத்தமாக வேலையே இருக்காது. இப்படி வருஷத்தில் ஆறுமாதம் வருமானமே இல்லாமல் தவிப்போம்.

இப்போது மாதம் உறுதியாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதைவைத்து உப்பு புளி மிளகாய் வாங்கிக் கொள்ள முடியும். பெரிய பணம் படைத்தவர்களுக்கு இது ஒரு தொகை இல்லைதான். எங்களைப் போன்ற மக்களுக்கு இந்தத் தொகை பெரிய விடுதலை. அதுவும் சி.எம். கையால் அந்தத் தொகை கிடைத்திருக்கிறது. பெரிய மகிழ்ச்சி" என்கிறார்
கலையரசி, "என் வீட்டுக்காரர் கூலி வேலைதான் செய்கிறார். பசங்கள் எல்லாம் படிக்கிறார்கள். என் பிள்ளைகள் வீதியில் விற்கும் சின்ன தின்பண்டங்களைக் கேட்டு வந்து நிற்கும்போது, கையில் காலணா இல்லாமல் மனசு கிடந்து துடிக்கும். நம் பிள்ளைகள் ஆசையை நம்மால் செய்து தர முடியவில்லையே எனத் தவிப்பேன். எனக்கு வருமானம் இல்லை. கணவர் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகவிடும்.

ஒரு பத்து ரூபாய் சொல்லுங்கள். யாரிடமாவது வாங்கினால் கூட அது கடன் தானே? ஆனால், இப்ப ஆயிரம் ரூபாய் சி.எம். போடுகிறார். நீங்கள் நினைத்துப் பாருங்கள். யார் தருவார் இந்தக் காலத்தில்?" என்கிறார் நா தழுதழுக்க.. குரல் கரகரக்க..
"என் கணவரிடம் கூடுதலாக ஒரு பத்து ரூபாய் கேட்டால், ஆயிரம் கேள்வி கேட்பார். ஏன்? எதற்கு? எனப் பல கேள்விகள். விளக்கம் கொடுத்த பிறகு, 'இது நமக்கு இப்ப தேவையா?' என்பார். நான் கேட்டது சின்ன விசயமாக இருக்கும். அதற்கே அவர் கையைத்தான் நம்பி இருக்க வேண்டும்.

இப்போது என் கையில் மாதம் 1000 ரூபாய். அதை நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. முன்பு எல்லாம் பிள்ளைகள் ஏதாவது கேட்டால், 'அப்பாவைக் கேட்டு வாங்கி தருகிறேன்என்பேன். இனிமேல் நானே வாங்கி தருவேன். அது எவ்வளவு பெரிய சந்தோஷம்?" என்கிறார் ஒரு தாய்
அவரைப் போல் இன்னொரு பெண் மணி, "என் பெரிய மகனுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்ணாடி மாற்றவேண்டும். அவன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான். ஒருமுறை கண்ணாடி மாற்ற 3 ஆயிரம் தேவை. ஒவ்வொரு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இப்போது இந்தத் தொகை அவர் கண்கண்ணாடிக்குக் கட்டாயம் உதவும்என்கிறார் இந்த வெகுளித்தனமாக அம்மா.

சரண்யா என்பவர், "நான் ஹவுஸ் ஒய்ஃப்தான். கையில் எனக்கு என்று ஒருபைசா இருக்காது. இனி, என் கையில் மாசம் ஆயிரம் வரும். அதை நினைக்கும்போது மனசு லேசா இருக்கு" என்கிறார்
முதல்வர் ஸ்டாலின் கொடுப்பது ஆயிரம் ரூபாய். அதற்குள் மறைந்திருக்கும் கதைகளோ பல்லாயிரம் !
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications