தெறிக்கவிடும் அறிவிப்புகளுடன் தமிழக பட்ஜெட் 2025- தமிழ்நாடு முழுவதும் 936 இடங்களில் லைவ் ஒளிபரப்பு!
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2025 நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் 936 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு பட்ஜெட்டில் பல மிக முக்கியமான அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறக் கூடும் என்பதால் மிகப் பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் பல அணிகளாக சிதறி நிற்பதால் திமுக கூட்டணி வெல்லும் வாய்ப்பு அதிகம் என்கின்றன கருத்து கணிப்பு முடிவுகள்.

இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் 2025 நாளை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பல மிக முக்கியமான அறிவிப்புகள் இடம் பெறும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மாணவர்களுக்கான நிதி உதவித் தொகை உள்ளிட்டவைகள் அதிகரிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனிடையே தம்ழ்நாடு அரசின் பட்ஜெட்டை நேரடியாக 936 இடங்களில் ஒளிபரப்பு (லைவ்) செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 இடங்களில் தமிழக பட்ஜெட் நேரடியாக- லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதேபோல 24 மாநகராட்சிகளில் 48 இடங்களிலும் 137 நகராட்சிகளில் 234 இடங்களிலும் பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் பட்ஜெட் லைவ் ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 936 இடங்களில் நாளை காலை 9.30 மணி முதல் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதேபோல நாளை மறுநாள் மார்ச் 15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலும் நேரடியாக பொதுமக்களுக்கு பிரம்மாண்ட திரைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டிருக்கின்றன.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications