சைலன்ட்டாக பரவும் மெட்ராஸ் ஐ.. இன்று முதல் 25 ஆம் தேதி வரை சென்னை பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ராஸ் ஐ நோய் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து இன்று முதல் 25 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது. இது ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி விடுகிறது. மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் சிவக்கும், வலி இருக்கும். அழுக்கு சேர்ந்து காலையில் விழிக்கும் போது கண்களை திறக்க முடியாதபடி ஒட்டிக் கொள்ளும்.

 Eye test camp is to be started today in Chennai for School students to curb Madras Eye

இதற்கு மருந்து கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி போடாமல், கண் மருத்துவரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை போட்டாலே விரைவில் குணமாகிவிடும். மெட்ராஸ் ஐ வந்தவர்கள் பயன்படுத்திய துணி, கைகுட்டை, தலையணை, போர்வை, செல்போன் உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

அப்படி பயன்படுத்தினால் அந்த நோய் அவர்களுக்கும் பரவும். நோய் பாதித்தோரும் கண்களில் வரும் தண்ணீரையும் அழுக்கையும் துடைத்துவிட்டு அந்த துணியை மற்ற துணிகளோடு கலக்காமல் துவைக்க வேண்டும். பொதுவாக இந்த கண் நோய் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பு வரும். தற்போது இந்த நோய் சென்னையில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாளொன்றுக்கு 100-க்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் இது அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண் நோய் பாதித்தவர்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் போய் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

 Eye test camp is to be started today in Chennai for School students to curb Madras Eye

மெட்ராஸ் ஐ குறிதது விழிப்புணர்வு தேவைப்படுவதால் சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 12 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இந்த 12 லட்சம் மாணவர்களுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே இந்த மாதம் கண் பரிசோதனை செய்யலாம் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

அந்த வகையில் இன்று முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 400-க்கும் மேற்பட்ட அரசு கண் மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த கண் மருத்துவர்களும், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் அமைப்புகளில் உள்ள கண் மருத்துவர்களை கொண்டு 12 லட்சம் மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+