சிவந்த கண்கள்.. கடும் கோபம்.. காசெல்லாம் என்னாச்சு.. டெல்லிக்கு போன "தலை".. துளைத்தெடுத்த மேலிடம்
சென்னை; தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பின்பாக கட்சி ஒன்றின் தலைவர் டெல்லி வரை சென்று தேர்தல் செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளாராம்.
தமிழ்நாட்டில் கண்ணை மூடி திறக்கும் முன் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பொதுவாக 2- 3ம் கட்ட தேர்தல்களில்தான் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடந்துவிட்டது. முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கும் என்பதை பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் எதிர்பார்க்கவில்லை.

1 மாத தயார் நிலை: ஆனால் திமுக இதற்காக ஏற்கனவே தயாராகி இருந்தது. பென் அமைப்பு சார்பாக ஏற்கனவே 1 மாதத்திற்கு முன்பாக தீவிரமாக திமுக தேர்தல் திட்டங்களை செய்தது. இதனால் திமுக இந்த தேர்தலுக்கு தயாராகவே இருந்தது. பாஜகவும் தமிழ்நாட்டில் முதல் கட்டத்தில் தேர்தல் நடக்கும் என்பதை அறிந்தே இருந்தது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் என்பதை உணர்ந்தே பிரதமர் மோடி மாறி மாறி வந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.
அதிமுக மட்டும் இன்னொரு பக்கம் தேர்தல் குறித்த பெரிய ஐடியா இல்லாமல் பிரச்சாரத்தில் போக போக சுணக்கம் காட்டியது. இந்த நிலையில்தான் தேர்தல் முடிந்த நிலையில் கட்சிகள் தற்போது முடிவிற்காக காத்து இருக்கின்றன. லோக்சபா தேர்தல் மின் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை கட்சியினர் பெரிதாக மின்னணு வாக்கு பெட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. சில இடங்களில் சிசிடிவி பிரச்சனைகள் மட்டும் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் பிரச்சனை: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பின்பாக கட்சி ஒன்றின் தலைவர் டெல்லி வரை சென்று தேர்தல் செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளாராம்.
அதன்படி தமிழ்நாட்டில் இறக்கப்பட்ட கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அவரிடம் டெல்லி விளக்கம் கேட்டு உள்ளதாம். தேர்தலுக்கு இவ்வளவு நிதிகள் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு வந்த உளவு ரிப்போர்ட்டில் கட்சி நிதி மக்களிடம் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் நிதி என்ன ஆனது?
எங்கே போனது? யாருக்கு எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டது அதில் எவ்வளவு மக்களுக்கு சென்று சேர்ந்தது? என்று சொல்லுங்கள் என்று டெல்லி தரப்பு விசாரித்து உள்ளது. இங்கே இருக்கும் முக்கிய தலையை அழைத்து மேலிடத்தில் உள்ள முக்கிய தலைகள் கூட்டாக விசாரித்து உள்ளனர். அதிலும் ஒரு முக்கிய தலைவர் கோபத்தின் உச்சியில்.. சிவந்த கண்களோடு.. கடும் கோபத்தோடு கேள்வி எழுப்பி உள்ளார்.
புகார் மேல் புகார்: தேர்தல் செலவினங்கள் தொடர்பாக எனக்கு புகார் மேல் புகார்கள் வருகிறது. நிறைய முக்கிய நிர்வாகிகளே என்னிடம் புகார் அளிக்கிறார்கள். அதனால் தேர்தல் கணக்கை காட்டுங்கள் என்று கேட்டு இருக்கிறாராம்.
எல்லா கட்ட தேர்தலும் முடியும் முன் தேர்தல் கணக்கை காட்டுங்கள் என்று டெல்லி மேலிடம் அவருக்கு உத்தரவிட்டு உள்ளதாம். தமிழ்நாட்டை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் தேர்தல் நிதி தொடர்பாக டெல்லியில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்கள் காரணமாகவே தற்போது டெல்லி மேலிடம் நிதி தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கி உள்ளது,












Click it and Unblock the Notifications