Volvo bus: ஆம்னி பஸ்சில் கூட இல்லாத வசதிகள்.. அரசு வால்வோ பேருந்து எப்படி இருக்கு பாருங்க! கப்பலில் போற மாதிரி இருக்கும்
சென்னை: தனியார் ஆம்னி பேருந்துகளை மிஞ்சும் வகையில் தற்போது நவீன வசதிகளுடன் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வால்வோ பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. இன்று முதல் கட்டமாக அதிநவீன 20 வால்வோ பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில் என்னென்ன வசதிகள் உள்ளன? என்ற விவரங்களை காணலாம்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலை தூரங்களுக்கு அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் எனப்படும் எஸ்இடிசி மூலமாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதிநவீன 20 வால்வோ பேருந்துகள்
சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் , சேலம், கோவை, என பல்வேறு தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தனியார் ஆம்னி பேருந்துகளை மிஞ்சும் வகையில் தற்போது நவீன வசதிகளுடன் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் பேருந்தினை இயக்கி வருகிறது. அந்த வகையில்தான், தற்போது அதிநவீன 20 வால்வோ பேருந்துகள் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் தனியார் பேருந்துகளை மிஞ்சும் வகையில் அதிநவீன சொகுசு வசதிகள் உள்ளன.
என்னென்ன வசதிகள் உள்ளன?
குளிர்சாதன வசதி கொண்ட புதிய பேருந்தில் பயணிகளுக்கு உயர்தர மற்றும் வசதியான இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 × 2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 இருக்கைகள், வெளிப்புற காட்சியை ரசிக்க விசாலமான ஜன்னல்கள், உயர்தர மேல்நிலை பொருட்கள் வைக்குமிடம் உள்ளது. பயணிகள் லக்கேஜ்களை எளிதாக வைத்து எடுக்கும் வகையில் விசாலமாக உள்ளது.
ஃபுட் ரெஸ்ட் எனப்படும் கால் வைக்கும் வசதியுடன் கூடிய இருக்கைகள், இரட்டை மொபைல் சார்ஜர் பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம் வசதியாக உள்ளது. யுஎஸ்பி டைப் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
டிராக்கிங் சிஸ்டம் வசதி
மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தீ பாதுகாப்பு அமைப்பு, அவசரநிலையில் விரைவாக பயணிகளை வெளியேற்ற அகலமான பகுதிகள் முன் பின் மற்றும் பக்க மோதல்களில் தாக்கத்தை குறைக்கும் பாதுகாப்பு அமைப்புகள், மேம்பட்ட பாதுகாப்பு வசதி இதில் உள்ளது.
அவசர காலத்தில் பயணிகள் வெளியேறுவதற்கு அவசரகால வெளியேறும் வழி, விபத்துகளை தவிர்த்திட வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள், வாகன செயல்திறன் மற்றும் கோளாறுகளை உடனுக்குடன் கண்டறிய கன்ட்ரோல் வசதி, ரிவர்ஸ் சென்சார் வசதி மற்றும் கேமரா, வாகனத்தை கண்காணித்திட பஸ் டிராக்கிங் சிஸ்டம் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பேருந்தை பார்க்கும் போதே
மல்டி ஆக்சில் கொண்ட இந்த பேருந்தை பார்க்கும் போதே மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்ட பேருந்தாக இது உள்ளது. இந்த பேருந்தை இயக்கும் டிரைவர்களுக்கு பிரத்யேகமாக பெங்களூரில் ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications