சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று முதல்.. ஏடிஎம் பயன்படுத்தினால் தனி கட்டணம் செலுத்தணுமா.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்பு

டிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பரவி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டுமாம்.. இப்படி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 வருடமாகவே உலகை ஆட்டி படைக்கும் கொரோனாவைரஸ் பரவலுக்கு தீர்வு இல்லை.. இது என்ன மாதிரியான வைரஸ் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. மருந்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை..

அதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வைரஸின் அறிகுறிகளும் தெளிவாக, உறுதியாக சொல்லப்படவில்லை..

திருப்பூரில் ஏடிஎம் மிஷினை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்.. போலீசார் அதிர்ச்சி திருப்பூரில் ஏடிஎம் மிஷினை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்.. போலீசார் அதிர்ச்சி

அறிகுறிகள்

அறிகுறிகள்

ஒவ்வொரு நாளும் அறிகுறிகள் குறித்த புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது.. மற்றொரு பக்கம் அறிகுறியே இல்லாமலும் தொற்று சிலரை தாக்குவதாக சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், கொரோனாவைரஸ் சம்பந்தமான பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

 தனிக்கட்டணம்

தனிக்கட்டணம்

அந்த வகையில், இந்தியாவில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவலும் பரபரத்து வருகிறது. இன்று முதல் அதாவது ஜுன் 1 முதல் ஏடிஎம்-களில் 4 முறைக்கும் மேல் பரிமாற்றம் செய்வோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.173 வசூலிக்கப்படும் என்றும் இதில் ரூ.150 வரி மற்றும் அதற்கான சேவை கட்டணம் ரூ.23 ஆகும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கலக்கம்

கலக்கம்

இதனால் பொதுமக்களிடையே ஒருவித கலக்கம் தொற்றி கொண்டது.. எனினும், சோஷியல் மீடியாவில் உலாவரும் இந்த பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த தகவலில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது... ஏடிஎம் பரிமாற்றங்களுக்கு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகபட்சம் ரூ.20 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது..

வசூல்

வசூல்

இதைதவிர, சில தனியார் வங்கிகள் மட்டும் மாதத்திற்குள் 4 முறைக்கும் மேல் ஏடிஎம் பரிமாற்றங்களை செய்வோரிடம் இருந்து ரூ.150 வரை வசூலிக்கின்றன...மற்றபடி இந்த விதிமுறையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை... இந்த கட்டணமும் 3 பரிமாற்றங்களுக்கு பின்னரே வசூலிக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..!

English summary
Fact check: you wont be charged extra for ATM transactions from June 1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X