ஆடியோ லான்சா? வேண்டவே வேண்டாம்.. தெறித்து ஓடும் நிர்வாகிகள்.. சசிகலாவிற்கு இப்படி ஒரு சிக்கலா?!
சென்னை: சசிகலாவின் ஆடியோ தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், அரசியலை புரட்டி போடும் என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில்.. அப்படி எதுவும் நடக்காமல் சாதாரண ஆடியோ லான்ச் நிகழ்வு போல தினமும் ஒரு ஆடியோ வெளியாகி அடங்கி போய்விடுகிறது.
சசிகலாவிற்கான கதவு அதிமுகவில் கிட்டத்தட்ட மொத்தமாக சாத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே நிலவிய பூசல்கள் கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டன.
எதிர்கட்சித் துணை தலைவர் பதவியையும் கூட ஓ.பன்னீர்செல்வம் இறங்கி வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். அதோடு சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பயம்
அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், கீழே கழக தொண்டர்களுக்கு இடையிலும் மோதல் குறைந்துள்ளது. அடிமட்டத்தில் நிலவிய போஸ்டர் மோதல், கோஷ்டி மோதல் எல்லாம் ஒரு வகையாக ஓய்ந்து இருந்து இருக்கிறது. இது அப்படியே சசிகலாவிற்கு எதிராக தற்போது திரும்ப தொடங்கி உள்ளது.

தகவல்
தற்போது வந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், சசிகலாவிடம் பேச கூட அதிமுகவின் தொண்டர்கள் பலர் ரெடியாக இல்லை என்கிறார்கள். மேலே இரண்டு தலைவர்களும் ஒன்று சேர்ந்துவிட்டனர். இப்போது நாங்கள் எப்படி சசிகலாவிடம் பேச முடியும். கட்சியில் யாருமே சசிகலாவிற்கு சப்போர்ட் இல்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் மட்டும் சசிகலாவிடம் பேசி என்ன செய்துவிட முடியும் என்று புலம்புகிறார்கள்.

பயம்
அதோடு சசிகலாவிடம் பேசினாலே நடவடிக்கை பாய்கிறது. அப்படி இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தொண்டர்கள் பலர் ஒதுங்க தொடங்கி உள்ளனராம். சசிகலா ஆடியோ லான்ச்சா வேண்டவே வேண்டாம் என்று பல்வேறு நிர்வாகிகள் போன் அட்டன் பண்ணவே பயப்படுகிறார்களாம். மேலிடத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கும் போதும், தேவையின்றி ஏன் மோதல் என்று சில நிர்வாகிகள் ஒதுங்க தொடங்கி உள்ளனதாக தெரிகிறது.. இதனால்தான் சசிகலா ஆடியோவும் சூடு குறைந்துள்ளது.

எடுக்கவில்லை
தொடக்கத்தில் சசிகலாவின் ஆடியோவும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் போக போக.. "பென் டிரைவ் மாத்தாத மினி பஸ் மியூசிக் சிஸ்டம்" போல பேசிய விஷயத்தையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அதிமுகவினர் அலுத்துக் கொள்கிறார்கள். டிடிவி தினகரனே சசிகலாவிற்கு ஆதரவாக எதுவும் பேசாத நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று நிர்வாகிகள் சிலர் அலுத்துக்கொள்கிறார்கள்.

தீர்மானம்
அதிமுக தலைமை தீர்மானம் போக தற்போது மற்ற மாவட்டங்களிலும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனால் இனியும் ஆடியோ பாலிடிக்ஸ் செய்வதை நிறுத்திவிட்டு சசிகலா வெளிப்படையாக களத்தில் இறங்கினால் மட்டுமே ஏதாவது செய்ய முடியும். போனில் பேசுவதை நிறுத்திவிட்டு சுற்றுப்பயணம், செய்தியாளர் சந்திப்பு என்று நேரடியாக களத்தில் இறங்கினால் மட்டுமே சசிகலா அரசியல் பயணத்தில் அதிரடி காட்ட முடியும்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications