“யூனிஃபார்ம் மேல கை வைக்காதீங்க".. ஒரிஜினல் போலீசிடமே ஓவரா சவுண்டு விட்டு மாட்டிய போலி போலீஸ்!
சென்னை: தாம்பரம் பகுதியில் காக்கி சீருடையில் இருந்த போலி போலீஸ், பான்பராக், குட்கா சோதனை என கடைகளில் வசூல் செய்துள்ளார். அந்த நபரை நிஜ போலீசார் சுற்றி வளைத்து பிடித்துச் சென்றனர். கைது செய்ய முயன்றபோதும், நிஜ போலீஸ் போலவே விரைப்பாகப் பேசி சீன் போட்டுள்ளார் அந்த நபர். நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றும் அந்த நபர், போலீஸ் வேஷம் போட்டு, கல்லா கட்டியுள்ளார்.
தாம்பரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசார் சிலர் வந்து சோதனை செய்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், தாம்பரம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பெயரில் வேறு யாரோ வேலையைக் காட்டுவதாக சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சங்கர் நகர் பகுதியில் போலீஸ் சீருடை அணிந்தவாறு ஒருவர் கடைகளுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஒரு கடையில் பதினைந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டிக் கொண்டிருந்த போலி போலீசை ரோந்து வாகனத்தில் வந்த சங்கர் நகர் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.
அப்போதும் தம் கட்டிப் பேசியுள்ளார் அந்தப் போலி போலீஸ். எங்கள் கேம்ப் அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும் என அந்த நபர் நாடகமாடி உள்ளார். அவரை வண்டியில் ஏறுமாறு நிஜ போலீஸ் கூறியதற்கு, "யூனிஃபார்ம்ல கை வைக்காதீங்க.. கைய எடுங்க மொதல்ல" என விரைப்பாகவே பேசிக் கொண்டிருந்துள்ளார்.
ஆனாலும் அவர் போலி என தெரிந்து அதிரடியாக அவரைக் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் ஆக நடித்து பணம் பறித்த அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் கைது செய்யப்பட்டவர் முரளி என்றும், வயது 40 என்றும், ஸ்ரீபெரும்புதூர் வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக இருப்பதும் தெரியவந்தது.
ஏற்கனவே கடை ஒன்றில் 15 ஆயிரம் ஏமாற்றி வாங்கிச் சென்றதாக ஒப்பு கொண்டதின் பேரில் அவர், மீது சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வணிகர்கள், கடை வியாபாரிகள், போலீஸ் என யாராவது சோதனை செய்தால் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications