போலி பத்திரங்கள்..சொத்து விற்பனையில் தமிழக அரசு போட்ட முக்கிய உத்தரவு..முளைச்சிடுச்சே புது குழப்பம்
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை பதிவுத்துறை கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டிருந்த உத்தரவில், புதிய குழப்பம் ஒன்று முளைத்துள்ளதாக தெரிகிறது. என்ன நடந்தது?
சொத்துக்கள் விற்பனையில், நிறைய மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்துவிட்டன.

ஆள் மாறாட்டம்: இதுபோல, ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடந்தால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடி வந்தனர்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றியிருந்தது.. அதன்படி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. எனினும் தொடர்ந்து போலி பத்திரங்கள் மூலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இதற்கும் தமிழக அரசு கடிவாளத்தை போட்டு வருகிறது.
தணிக்கை: அதேபோல, சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது, கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வுகளை போட்டோக்களாக பத்திரத்தில் இணைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.. இந்நிலையில், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு காரணம், சில இடங்களில் காலி நிலம் என்று சொல்லி, கட்டிடத்தை மறைத்து, பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால்தான், காலி நிலங்களின் புகைப்படத்தை பத்திரத்தில் இணைக்க வேண்டும் என்றும், காலி நிலம் மட்டுமல்லாமல், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவானது கடந்த அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது.
பலன்கள்: இந்த புதியநடைமுறையால், பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது தடுக்கப்படுவதுடன், கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று பதியப்படுவதால், ஏற்படும் வருவாய் இழப்பையும் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.. இந்த புதிய உத்தரவின்படியே, ஜிபிஎஸ் எனப்படும் புவியிடம்காட்டும் வசதியுள்ள, செல்போனில் எடுத்த போட்டோக்களை பத்திரத்தில் பொதுமக்கள் இணைத்து வருகிறார்கள்.
எனினும், இதில், சொத்து அமைந்துள்ள இடத்தின் பெயர், பெரும்பாலான போட்டோக்களில் தெளிவாக இல்லையாம்.. அதனால், போட்டோவில் உள்ள அட்சரேகை, தீர்க்க ரேகை விபரங்களை, சரிபார்க்க முடிவதில்லை என்று புதிதாக சிக்கல் முளைத்திருக்கிறதாம்.
அடுத்த குழப்பம்: இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, போட்டோவில் சொத்து அமைந்துள்ள இடத்தின் தெரு, நகர் பெயர் இருந்தால் மட்டுமே, அதை உறுதிபடுத்த முடியும்.
ஆனால், கூகுள் மேப்பில் பெயர் பதிவாகாத ஊரக பகுதிகளில், தெரு, நகர் பெயர், போட்டோக்கள் வருவதில்லை. எனவே, அந்த போட்டோக்களின் உண்மைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்கிறார். எனினும், இந்த சிக்கலுக்கும் அரசு விரைவில் ஒரு தீர்வு சொல்லும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications