போலி பத்திரங்கள்.. வீட்டு பத்திரம் யார் பெயரில் உள்ளது என அறிய சூப்பர் வழி.. சிக்கும் மோசடி பத்திரம்
சென்னை: நாளுக்கு நாள் போலி பத்திரங்களின் நடமாட்டமும், அதுகுறித்த மோசடிகளும் அதிகரித்து வரும்நிலையில், பத்திரங்கள் யார் பெயரில் உள்ளது என்பதை ஆன்லைனிலேயே நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
தமிழக அரசு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ, அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திர பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதுமட்டுமல்ல, அந்த பத்திரத்தை எழுதிக்கொடுத்தவர், பத்திரத்தின் அனைத்து தரப்பினர், தொடர்ச்சி ஆவணம் இருந்தால் அதன் தரப்பினர், பத்திரம் ரத்து செய்யப்பட்டால், அதனால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு இந்த அறிவிப்பை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்படி போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது..
அதனால்தான், இதற்கும் அரசு ஒரு வழியை செய்திருக்கறது.. அதன்படி, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, ஆன்லைனிலேயே வசதியும் உள்ளது..
ஆன்லைன் வசதி: இதற்காக இணையதள முகவரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. http://ecview.tnreginet.net/ என்ற இணையதளத்திற்கு சென்று, சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் நம்பர், பதிவு செய்த வருடம் என இந்த 3 விஷயங்களை பதிவு செய்தால், பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் நமக்கு கிடைத்துவிடும்.
ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்களே ஆன்லைனில் தெரிந்து கொள்ள வசதி உள்ள நிலையில், போலி பத்திரங்கள் யார் பெயரில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவே இந்த வசதியை அரசு செய்து தந்துள்ளது.
ஒருவேளை, அது போலி பத்திரம் என்பது உறுதியாகும் பட்சத்தில், அதை நிரூபிக்க தேவையான தடையங்களுடன், நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்த, அதனை ரத்து செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications