'நான் கோயம்பேடு எஸ்ஐ'.. காட்டாங்குளத்தூர் காலேஜில் கண்டமான இளைஞர்.. மந்திரித்து விட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்கு சென்ற 23 வயது இளைஞர், தான் கோயம்பேட்டில் எஸ்ஐ ஆக பணியாற்றுவதாகவும், உதவி தெகையுடன் என்ஜினீயரிங் சீட்டு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஏன் என்பதை பார்ப்போம்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்திற்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் 25 வயது மதிக்கத்தக்க வகையில் ஒரு இளைஞர் வந்துள்ளார்.

Fake SI Arrested for Cheating Chennai Kattangulathur Private College

அவர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் சென்று தான், சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருவதாகவும், எனக்கு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித் தொகையுடன் ஒரு சீட்டு கண்டிப்பாக வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாக ஊழியர்கள் அவரிடம் அடையாள அட்டை காண்பியுங்கள் என்று கேட்டுள்ளனர். உடனே அந்த இளைஞர் சப்-இன்ஸ்பெக்டர் என்று எழுதப்பட்டு இருந்த ஐடி கார்டை தூக்கி காண்பித்தார்.

ஆனால் அவரது பேச்சு, நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர், கோயம்பேடு எஸ்ஐ என்று காட்டிய ஐடி கார்டு போலியாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதுகுறித்த கல்லூரி நிர்வாகம் மறைமலைநகர் போலீசுக்கு ரகசியமாக தகவல் கொடுத்தனர்.
அத்துடன் அவரிடம் பேசிக்கொண்டே அவரை பிடித்து வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பேசினார்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது போலீசுக்கும் சந்தேகம் வலுத்தது. தங்கள் சந்தேகத்தை தீர்க்க விரும்பிய போலீசார் அவரை மறைமலை நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அப்துல் முகீத் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வி அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நேர்முக தேர்வு வரை சென்று தோல்வி அடைந்த அப்துல் முகீத், தனது உறவினர்களிடம் நான் சப்-இன்ஸ்பெக்டராக தேர்ச்சி பெற்று சென்னை கோயம்பேட்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறேன் என்று கூறி நம்ப வைத்துள்ளார். அத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் அணியும் உடைகளை அணிந்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை காண்பித்து ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் முகீத்தை கைது செய்தனர். மேலும் இவர் வேறு எங்கேயாவது ஏமாற்றினாரா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காட்டாங்குளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+