ஜோதிடத்தால் புத்தி மாறி கொலையாளி.. ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்
Recommended Video
சென்னை: ஜோதிடர் மீதான அதீத நம்பிக்கை வைத்து கொலையாளியாகி ஆயுள் தண்டனையும் பெற்று சிறைவாசத்துடன் மரணித்துப் போய்விட்டார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.
1980களில் இருந்து இன்று வரை சைவ உணவுகளில் தனித்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது சென்னை சரவணபவன். ஹோட்டல் தொழிலில் உச்சத்தைத் தொட்ட அதன் உரிமையாளரான ராஜகோபாலுக்கு பேராசை விடவில்லை.

ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை
தமது வாழ்க்கையை மேலும் வளமாக்கிக் கொள்ள ஜோதிடர்களை நம்பினார்... ஜோதிடத்திடம் தம்மையே ஒப்படைத்துக் கொண்டார். ஜோதிடர்கள் எதை சொன்னாலும் செய்ய தயங்காதவராக இருந்தார் ராஜகோபால்.

ஜீவஜோதியை திருமணம் செய்ய முயற்சி
இதனால் 3-வது திருமணத்துக்கும் தயாரானார் ராஜகோபால். அதுவும் தமது ஓட்டல் மேலாளர் ஒருவரின் மகளான ஜீவஜோதியை 3-ம் திருமணம் செய்ய முயற்சித்தார். ஆனால் ஜீவஜோதி இதற்கு உடன்படவில்லை.

கொலையாளியானார் ராஜகோபால்
தாம் காதலித்த பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜகோபால் சாந்தகுமாரை கொலை செய்து கொலையாளியானார். ஊடகங்கள் பக்கம் பக்கமாக ராஜகோபாலின் திருவிளையாடல்களை எழுதி தீர்த்தன.

ஆயுள் கைதியாக மரணம்
ஜோதிடத்தால் புத்தி மாறி போய் கொலையாளியான ராஜகோபால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக சிறைக்குப் போனார். தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாகவே காலமாகிவிட்டார். ஜோதிடர் பேச்சை கேட்டு 3-வது திருமணம் செய்ய முயற்சிக்காமல் இருந்திருந்தால் சர்வதேச அளவில் சாப்பாட்டு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக வலம் வந்திருப்பார் 'அண்ணாச்சி' ராஜகோபால்!
சக்கரவர்த்தையை சாய்த்த ஜோதிடம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications