"பொய்".. அண்ணாமலை பேசிய "அபத்தம்".. தமிழ்நாடு காவல்துறை சொன்ன முக்கிய பாயிண்ட்.. கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாடு காவல்துறை பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது. காவல்துறை தலைமையகம் சார்பாக வெளியிடப்பட்டு உள்ள இந்த அறிக்கையில் அண்ணாமலையின் சில கருத்துக்களுக்கு போலீஸ் தரப்பு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
கோயம்புத்தூரில் கார் வெடிப்பு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். இந்த கார் வெடிப்பில் போலீசார் தகவல்களை வெளியிடும் அண்ணாமலை பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
முக்கியமாக அமைதியாக கையாள வேண்டிய விஷயத்தில், அதிர்ச்சியை கிளப்பும் விதமாக அவர் சில கருத்துக்களையும் தெரிவித்தார்.

என்ஐஏ
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு போலீஸ் கோட்டை விட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். போலீஸ் இதில் துரிதமாக செயல்படவில்லை. என்ஐஏ இதை உடனே விசாரிக்க வேண்டும். நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார்.

அபத்தம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு காவல்துறை பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது. இதில் அண்ணாமலைக்கு எதிராக முக்கியமான விமர்சனம் ஒன்றை காவல்துறை தரப்பு வைத்துள்ளது. அதில், திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே தமிழ்நாடு அரசுக்கு எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. இது பொய்யான பழி.

பொய்
ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். அது உண்மை கிடையாது.

உண்மை அல்ல
குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அப்படி எந்த விதமான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. . இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருந்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து , வீடுகளை சோதனையிட்டு , வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும். 18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

கோவை
மற்றபடி கோவைக்கு என்று தனியாக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்ணாமலை பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு போலீசார் நேரடியாக குற்றஞ்சாட்டி உள்ளனர். முன்னாள் போலீஸ் அதிகாரியை குறித்து தமிழ்நாடு போலீஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications