ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது மீண்டும் மோசடி புகார்.. “9 கிலோ தங்கத்துக்கு காசு தரல”.. சென்னையில் பரபர!
சென்னை: சென்னையில் செயல்படும் பிரபல நகை கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியதாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் "ஹெலிகாப்டர் சகோதரர்கள்" என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்களை இவர்கள் செய்து வந்தனர்.

சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் ஹேலிபேட் வைத்திருந்த இவர்கள், பாஜக பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு என தங்களை பிரமாண்டமாக அடையாளப்படுத்திக்கொண்டனர். தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என அறிவித்து வசதியானவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தனர்.
இதற்காகத் தனியாக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கும் பெரும் தொகையை கமிஷனாக வழங்கி கோடிக் கணக்கில் முதலீட்டை திரட்டினர். ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணம் சரியாகக் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள் பலரும் தாங்கள் பணம் கொடுத்த ஏஜென்ட்டுகளை நெருக்கத் தொடங்கினர். இதையடுத்து ஏஜென்ட்டுகள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். அவர்கள் தலைமறைவானதால் கும்பகோணம் களேபரமானது.
கும்பகோணத்தைச் சேர்ந்த பலரும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது பண மோசடி புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சிலரை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கணேஷ், சுவாமிநாதன் மீது சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த அவர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ள நிலையில் அவர்கள் இருவரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது மீண்டும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications