பிரபல நடிகர் போஸ் வெங்கட் இப்படி சொல்றாரே.. திமுககாரனுக்கு மிரட்டலா? தாமரை மலருமா? அதிர சிரித்த நடிகை
சென்னை: முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து, பிரபல நடிகர் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றை தந்துள்ளார். பிரபல சேனலுக்கு தந்துள்ள இந்த பேட்டி, திமுகவினர் இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.. என்ன காரணம்?
பிரபல நடிகர் போஸ் வெங்கட் திமுகவின் மிக தீவிரமான ஆதரவாளர் ஆவார்.. அந்தவகையில், அரசியலிலும் குதித்துள்ளார்.. தேர்தல் நேரங்களில், பம்பரமாக சுற்றி சுற்றி, திமுகவுக்காக வாக்குகளை சேகரிப்பவர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுவும் தாக்கல் செய்தார் நடிகர் போஸ் வெங்கட்.
பிரச்சாரம்: அப்போது செய்தியாளர்களிடம் போஸ் வெங்கட் பேசியபோது, "ஒருவேளை திமுக தலைவர் ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெறுவேன்... நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் 5 ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன். சென்னைக்கு வரமாட்டேன், தொகுதிக்காக முழுமையாக பாடுபடுவேன்" என்றும் அறிவித்திருந்தார்.
அதுமட்டுமல்ல, தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வாழ்த்தை பெறுபவர்.. தன்னுடைய குடும்பமே திமுக குடும்பம் என்று பலமுறை பேட்டிகளில் பூரித்து சொல்லும் போஸ் வெங்கட், தன்னுடைய தந்தை திமுக-வில் இருந்தவர் என்பதால், வீட்டில் நிறைய கலைஞர் போட்டோக்கள் இருக்கும் என்று நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார்..

கலைஞர் கருணாநிதி: இந்நிலையில், ஒரு பிரபல சேனலுக்கு போஸ் வெங்கட் மற்றும் அவரது மனைவி பிரபல நடிகையான சோனியாவும் பேட்டி தந்துள்ளனர்.. அப்போது, மனம்திறந்து முதல்வர் ஸ்டாலின் குறித்த சில விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.. "என் மகளுக்கு அரசியல் என்றால் அதிக ஆர்வம்.. அதனால், என் பிள்ளைகளுக்கு அரசியலை சொல்லி தந்து வருகிறேன்.. என் 2 பிள்ளைகளிடமும் சினிமாவை விட அரசியல்தான் அதிகம் பேசுவேன்.
தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், கலைஞர் அவர்களையும், இன்றைய முதல்வர் அவர்களையும், என் பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறேன். அன்னைக்குகூட, முதல்வருடன் சேர்ந்து போட்டோ எடுக்க பிள்ளைகளை அழைத்து சென்றிருந்தேன்.. தளபதியை பார்த்ததுமே, "யார் அவர்?" என்று அவர்களிடம் கேட்டேன்.. 'எங்க தாத்தா' என்று சொல்லிக் கொண்டே ஓடுகிறார்கள் அவரிடம்.. அதேபோல, பெரியாரிசமும் சொல்லிக் கொடுத்து வந்துள்ளேன்.
பிஜேபி உறுப்பினர்: என் மனைவி இருக்காங்களே, இவங்க பிஜேபியில் சேரப்போறாங்களாம்.. எல்லா ரவுடியும் சேர்ந்துட்டாங்க.. இவங்களும் சேர போறாங்க.. பாஜகவில் உள்ள மகளிர்களுக்கே டஃப் தருவார்.. எதுகை-மோனையாக பேசுவார்.. அந்த கட்சி ஓஹோ என்று வளர்ந்து, தாமரை மலர காரணமாக இவரே இருப்பார்.. இப்போவெல்லாம் வீட்டில் எங்களுக்குள் சண்டை வந்துவிட்டால், "உனக்கு எதிராக நான் போய் பிஜேபியில் சேர போறேன்னு" என்கிட்ட சவால் விடறாங்க..

இப்போ ஒவ்வொரு குடும்பத்திலும் இதான் நடக்கும்போல.. "இருங்க, உங்களை பிஜேபியில சேர்ந்து பழிவாங்கறேன்" என்று ஒவ்வொரு திமுககாரனுக்கும் அவங்களோட மனைவியின் மிரட்டலே இதான் போல.. அரசியலை குடும்பத்துக்குள் புருஷன் பொண்டாட்டி வரைக்கும் கொண்டுவந்து நிறுத்திட்டாங்களே" என்று போஸ் வெங்கட் கிண்டலாக பேச பேச, சோனியா அடக்க முடியாமல் சிரித்தார். இந்த வீடியோவை திமுககாரர்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறார்கள்.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications