"பிரபல நடிகர்" செய்த பகீர்... அதுவும் நடுரோட்டிலேயே.. "தூள் தூளானது".. மிரண்டு போன மதுரவாயல்
நடிகர் ஒருவர் தனது காரை தானே நொறுக்கி தள்ளி உள்ளார் சென்னையில்
சென்னை: பரபரப்பு சம்பவம் ஒன்று சென்னையில் நடந்து, 4 நாட்களாகியும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.. என்ன அது?
தன்னுடைய காரை, தானே நொறுக்கி கொள்வது என்பது உலகம் பூராவும் அவ்வப்போது நடக்கும் விஷயமாகும்.. பெரும்பாலானோர் இதை தங்களது பப்ளிசிட்டிக்காக செய்வார்கள்.
இப்படித்தான் ஒருமுறை அயர்லாந்து நாட்டில் ஒரு சம்பவம் நடந்தது... அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன்... இவர் அந்நாட்டில் நடைபெற்ற டி20 விளையாட்டில் பங்கு பெற்றிருந்தார்..

சிக்ஸர்
ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அவர், 37 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களை குவித்தார். மைதானே கைகளை தட்டி அவரை பாராட்டியது.. விளையாடிவிட்டு மைதானத்திற்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய காரில் ஏறி கிளம்ப போனார்.. ஆனால், திடீரென அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.. ஏன் தெரியுமா? அவர் அடித்த சிக்ஸரில் ஒன்று, அவருடைய டொயாட்டோ காரின் மீது விழுந்து, கண்ணாடி பின்பக்க கண்ணாடி முழுவதும் சல்லி சல்லியாக நொறுங்கி விட்டது..

சிக்ஸர்கள்
பிறகென்ன... தான் அடித்த பந்து தானே என்று தன்னை தானே தேற்றிக்கொண்டு, அந்த காரின் முன்னாடி நின்று ஒரு போட்டோவையும் எடுத்துக் கொண்டு, அதே காரில் ஏறி கிளம்பி சென்றுவிட்டார்.. இதாவது பரவாயில்லை.. சமீபத்தில் சென்னை மதுரவாயலில் ஒரு சம்பவம் நடந்தது..

திடீர் தீ
அவர் பெயர் சதீஷ்குமார்.. பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருப்பவர்.. இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது... உடனே போலீசுக்கு ஓடினார்.. புகார் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.. அப்போது, ஒரு மர்ம நபர் காரின் முன்பின் பக்கமாக பெட்ரோல் நனைத்த துணியால், காரின் நாலு பக்கமும் நிதானமாக நின்று துடைத்துவிட்டு, அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்துவது தெளிவாக பதிவாகி இருந்தன.

நடிகர்
இதனால் சந்தேகமடைந்த போலீசார் சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.. அந்த காரை விற்று நகை வாங்கித் தரும்படி, அவரது மனைவி வீட்டில் எந்நேரமும் தொந்தரவு செய்து கொண்டே இருந்தாராம்.. அந்த கார் இருக்கவேதானே நகை கேட்கிறார் என்று நினைத்து, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் காரை, அவரே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.

நடிகர் கருத்து காமராஜ்
இப்போது அதே மதுரவாயலில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. அவர் பெயர் காமராஜ்.. இவர் ஒரு டிவி சீரியல் நடிகர்.. கருத்து காமராஜ் என்பது இவரது இன்னொரு பெயர்.. சமூக அக்கறை நிறைந்தவர்.. சமூகத்தை பாதிக்கும் எந்த விஷயத்தையும் துணிச்சலாக எதிர்த்து வருபவரும்கூட.. டிவி சீரியல் தவிர, பல்வேறு நாடகங்களில் நடித்து வருகிறார்... இவர் தன்னுடைய காரை தானே நடுரோட்டில் அடித்து நொறுக்கி உள்ளார்.. இதற்கு காரணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளாராம்..

கடுங்கோபக்காரர்
காருக்கு தினமும் பெட்ரோல் போட அதிக பணத்தைச் செலவழிப்பது, இவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.. அதனால், தனக்கு சொந்தமான காரை தானே நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்து உடைத்துள்ளார்.. மேலும் அதனை வீடியோவாக பதிவுசெய்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.. அந்த வீடியோ இத்தனை நாளாகியும் வைரலாகி கொண்டே இருக்கிறது.. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.. மேலும் சிலரோ, சார், கடுங்கோபக்காரரா இருப்பாரோ?" என்று பதிவிட்டு வருகிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications