சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"10 தல".. 708 கோடி ரூபாயாமே அப்பு.. தங்கச்சி மகாலட்சுமி.. என்னத்த சொல்றது.. நொந்துபோன "கூல் சுரேஷ்"

நயன்தாராவுக்கு கூல் சுரேஷ் தீபாவளி வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் விற்பனை குறித்து, நடிகர் கூல் சுரேஷ் காரணம் ஒன்றை கூறியுள்ளார்.. அத்துடன் நயன்தாராவுக்கு தீபாவளி வாழ்த்தையும் கூறியுள்ளார்.

நடிகர் கூல் சுரேஷ்.. இவர் சிம்புவின் தீவிரமான விசிறி.. அடிக்கடி சிம்பு நடித்து வெளிவரும் படங்கள் குறித்து, புரமோஷன் செய்து வீடியோ வெளியிடுவது வழக்கம்.

இப்படித்தான், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டிரைலர் வெளியான அன்றே, இந்த படம் வெளியாகும் தினமான செப்டம்பர் 15-ம் தேதி அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கேட் வழியே வந்தது யார்? கதறி அழுத கூல் சுரேஷ்! காணாமல் போன தந்தைக்கு என்னாச்சு-சிசிடிவியில் ட்விஸ்ட்கேட் வழியே வந்தது யார்? கதறி அழுத கூல் சுரேஷ்! காணாமல் போன தந்தைக்கு என்னாச்சு-சிசிடிவியில் ட்விஸ்ட்

 கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

இப்போது சிம்புவின் பத்து தல என்ற படம் வெளிவர போகிறது.. இந்த படத்துக்கான புரமோஷனை இப்போதே கூல்சுரேஷ் ஆரம்பித்துவிட்டார்.. இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் சொல்லி உள்ளதாவது: "ஹாய், அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. எல்லாரும் சிறப்பாக தீபாவளி கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அதேமாதிரி தலைதீபாவளியும் கொண்டாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.. எனக்கும் இந்த வருஷம் தலைதீபாவளிதான்.. ஆச்சரியமா இருக்கா?

 நடிகர் சிம்பு + பத்து தல

நடிகர் சிம்பு + பத்து தல

உண்மையிலேயே எனக்கு தலைதீபாவளிதான்.. ஒரு தலை, 2 தலை, 3 தலை, 4 தலை, 5 தலை, 6 தலை, 7 தலை, 8 தலை, 9 தலை, 10 தலை தீபாவளி.. ஆமாம், எஸ்டிஆர் நடித்துள்ள 10 தலை தீபாவளி.. சிம்புன்னா கெத்து தலை.. 10 தலை படத்துக்கு என்னுடைய பிரமோஷன் வேற மாதிரி இருக்கும்.. எல்லாரும் இதுக்கு சப்போர்ட் செய்யணும்.. தீபாவளி முன்னிட்டு, சனி, ஞாயிறு, திங்கள் என்று இந்த 3 நாளில் ஒயின்ஷாப்பில் வியாபாரம் எவ்வளவு ஆகிருக்கு தெரியுமா? 708 கோடி ரூபாய் அப்பு.. அப்படின்னா மக்கள் யாரும் ஏழைகளே இல்லை போல..

 மகாலட்சுமி

மகாலட்சுமி

எல்லாரும் சந்தோஷத்தில்தான் இருக்காங்க போல.. இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாகத்தான் 708 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது.. அதுமட்டுமல்ல, இந்த சந்தோஷத்துக்கு இன்னொரு காரணம், உங்கள் சகோதரி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், இவர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்தான்.. இவர்களுக்கும் உங்கள் சந்தோஷத்தில் பங்கு உள்ளது.. சகோதரி நயன்தாராவுக்கும் பங்காளி விக்னேஷ் சிவனுக்கும் என்னுடைய தலைதீபாவளி வாழ்த்துக்கள்..

 708+ கோடி

708+ கோடி

அதேபோல தயாரிப்பாளர் ரவீந்திரன், தங்கை மகாலட்சுக்கும் தலைதீபாவளி வாழ்த்துக்கள்.. இதைதான் 708 கோடிக்கு வியாபாரம் செய்து தமிழகமே கொண்டாடி உள்ளது.. ஆனாலும் 708 கோடி அப்பு.. நானெல்லாம் நாளைக்கு என்னடா செய்றதுன்னு தெரியாமல் தவிச்சிட்டு இருக்கேன்.. இங்கே 708 கோடியாமுல்ல.. என்னத்த சொல்றதுன்னு தெரியல..!!" என்று அந்த வீடியோவில் ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார்.

English summary
Famous Actor Cool Suresh says about TN Tasmac and diwali wishes to Nayanthara
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X